2025 மே 19, திங்கட்கிழமை

முஸ்லிம் இளவரசியாகிறார் அனுஷ்கா...

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 13 , மு.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


அனுஷ்கா தற்போது தெலுங்கில் 'ருத்ரம்மாதேவி', 'பாகுபாலி' ஆகிய சரித்திர திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த திரைப்படங்களுக்காக கடுமையான வாள் பயிற்சியும், பழங்கால சண்டை பயிற்சிகளும் கற்றுக்கொண்டு வருடக் கணக்கில் நடித்து வருகிறார்.

சரித்திரத் திரைப்படங்களுக்கேற்ற உடல்வாகு கச்சிதமாக பொருந்துவதால் தொடர்ந்து அதுபோன்ற கதாபாத்திரங்கள் அனுஷ்காவை நோக்கி வந்துகொண்டே இருக்கின்றது.

ருத்ரம்மாதேவி, பாகுபாலி ஆகிய இரண்டு திரைப்படங்களையும் முடித்துவிட்டு திருமணம் செய்யும் எண்ணத்தில் இருந்த அனுஷ்காவுக்கு முஸ்லீம் அரசி வேடம் வந்துள்ளதால் தான் இதுவரை நடிக்காத பாத்திரம் என்ற காரணத்தினாலும், இரண்டு கோடிக்கு மேல் சம்பளம் தருவதாக தயாரிப்பாளர் கூறியதாலும் இந்த படத்தில் நடிக்க அனுஷ்கா முடிவு செய்துள்ளார்.

இந்த படத்திற்கு 'பாஹ்மதி' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. கோல்கோண்டா என்ற ராஜ்யத்தை ஆண்டு வந்த முகம்மது ஹூலி என்ற மன்னனின் மனைவியாக அனுஷ்கா நடிக்கிறார்.

முதலில் இந்த கேரக்டரில் நடிக்க தமன்னாவைத்தான் ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர் பேசிவந்தார். பின்னர் தமன்னா இந்த கேரக்டருக்கு பொருத்தமாக இருக்கமாட்டார் என்று இயக்குனர் கூறியதால் அனுஷ்காவை ஒப்பந்தம் செய்துள்ளனர். இதனால் தமன்னா அதிர்ச்சி அடைந்துள்ளார்.




You May Also Like

  Comments - 0

  • Moorthy Thursday, 19 December 2013 04:23 PM

    முகம் மலர்ந்த மலர் ஒன்று மலர்களை ஏந்தி நிக்கிறது!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X