2025 மே 19, திங்கட்கிழமை

தப்சிக்கு சூப்பர் விருந்து...

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 24 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


'ரன்னிங் ஷாதி.காம்' என்ற திரைப்படத் தயாரிப்பு குழுவினர் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பக்ரியான் அரண்மனையில் அந்த திரைப்படத்தின் படப்பிடிப்பை நடத்தினர். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகை தப்சியும் அக்குழுவினருடன் பாட்டியாலா அருகில் இருந்த கிராமம் ஒன்றில் பத்து நாட்கள் தங்கியிருந்தார்.

அப்போது அந்த அரண்மனையில் வசித்து வந்த அரச குடும்பத்தின் வாரிசுகள் தங்களை தினமும் விருந்துக்கு அழைத்ததாகவும், சுவையான பாரம்பரிய பஞ்சாபி உணவு வகைகளை வழங்கி தங்களை உபசரித்ததாகவும் தப்சி கூறினார்.

மேலும் அருகில் உள்ள இடங்களை சுற்றிப் பார்க்கவும் அவர்கள் உதவினர். அரச குடும்பத்தினர் என்ற போதிலும் அவர்கள் அனைவரும் பழகுவதற்கு மிகவும் எளிமையாக இருந்தனர் என்றும் அவர் குறிப்பிட்டார். 

இதுதவிர தற்போது சென்னையில் தான் நடித்துவரும் 'முனி 3 கங்கா' திரைப்படத்தில் தொலைக்காட்சித் தொடர் இயக்குனராக தான் இந்த திரைப்படம் முழுவதும் சீரியசான கதாபாத்திரத்தில் வருவதாக தப்சி தெரிவித்தார். நடிகர் லோரன்ஸ் சீரியசான இந்தக் கதாபாத்திரத்திற்குத் தன்னை தேர்வு செய்தது குறித்த தனது ஆச்சரியத்தையும் அவர் வெளிப்படுத்தினார். 

டென்மார்க்கைச் சேர்ந்த பேட்மிண்டன் வீரர் மத்தியாஸ் போவுடனான இவரது நட்பு குறித்து கேட்கப்பட்டபோது இந்த நட்பு என்பது தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விஷயமாகும் என்று சொல்லி கருத்து கூற தப்சி மறுத்துவிட்டார்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X