2025 மே 19, திங்கட்கிழமை

சிம்பு விவகாரம்; நன்றிகடன் செலுத்தினார் ஹன்சிகா...

Menaka Mookandi   / 2014 ஜனவரி 01 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை சிம்ரன். அஜீத், விஜய், சூர்யா போன்ற முன்னணி ஹீரோக்களுடன் நடித்த சிம்ரன், சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் முடித்து குடும்ப வாழ்க்கைக்கு திரும்பினார். பின் அவருக்கு இரண்டு ஆண் குழந்தைகளும் பிறந்தன, சினிமா பட வாய்ப்புகள் ஏதும் வராததால், சின்ன திரையில், சில தொலைக்காட்சிகளில் தலை காட்டி வந்தார்.

மேலும் தன்னுடன் நடித்த ஹீரோக்களிடம் தொடர்பு கொண்டு நடிக்க வாய்ப்பு கேட்டார். ஆனால் சிம்ரனை யாரும் கண்டுகொள்ளவில்லை. நடிகை சிம்ரன் திரைப்படத் தயாரிபாளராக மாற இருக்கிறார். அவர் இயக்கும் திரைப்படத்தில் அவரே ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக செய்தியாளர்களிடம் கூறினார்.

தனது படத்தில் ஹீரோவாக நடிக்க ஒரு புதுமுகத்தை தேர்வு செய்து வைத்துள்ளாராம். ஹீரோயினியாக நடிக்க ஹன்சிகாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. சிம்புவுடன் ஹன்சிகா காதல் கொண்டபோது சிம்ரன் அவருக்கு சிம்புவுடன் இருந்து விலக அறிவுரை வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த நன்றிக்கடனுக்காக சிம்ரன் தயாரிப்பில் உருவாகவுள்ள திரைப்படத்தில் நடிக்க ஹன்சிகா ஒப்புக்கொள்வார் என தெரிகிறது. மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. ஏதிர்வரும் பொங்கலுக்கு பிறகு முறையான அறிவிப்பு வரும் என தெரிகிறது.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X