2025 மே 19, திங்கட்கிழமை

அரை நிர்வாண போஸ்; சிரஞ்சீவி மகன், எமி ஜெக்சன் மீது வழக்கு

Menaka Mookandi   / 2014 ஜனவரி 16 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


'யவடு' திரைப்படத்தின் சுவரொட்டிகள் ஆபசமாக இருந்ததாகக் கூறி ஒருவர் முறைப்பாடு செய்ததை அடுத்து நடிகர் ராம்சரண் தேஜா, நடிகை எமி ஜெக்சன் மற்றும் 7 பேர் மீது பொலிஸார் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

சுவரொட்டியில் எமி ஜெக்சன் அரை நிர்வாணமாக போஸ் கொடுத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தேஜா, ஸ்ருதி ஹாஸன், எமி ஜெக்சன் நடித்துள்ள தெலுங்கு திரைப்படமான 'யவடு', கடந்த 12ஆம் திகதி வெளியானது. இத்திரைப்படத்தின் போஸ்டர்கள் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஆந்திர மாநிலம் கர்ணூல் மாவட்டத்தைச் சேர்ந்த கே. நாகேந்திர பிரசாத் என்பவர் பொலிஸில் முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளார். அவர் தனது முறைப்பாட்டில் மனுவில் கூறியிருப்பதாவது,

'யவடு' திரைப்பட சுவரொட்டிகள் பார்க்க ஆபாசமாக உள்ளன. அதில் எமி ஜெக்சன் அரை நிர்வாண கோலத்தில் போஸ் கொடுத்துள்ளார். இதனால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று அந்த முறைப்பாட்டில் தெரிவித்திருந்தார்.

இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் ராம்சரண் தேஜா, எமி ஜெக்சன் மற்றும் 7பேர் மீது பொலிஸார் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X