2025 மே 19, திங்கட்கிழமை

விஜய் வசமானார் சமந்தா...!

Menaka Mookandi   / 2014 ஜனவரி 22 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


கடந்த 2012ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் துப்பாக்கி. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இந்த திரைப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

தற்போது விஜய் முருகதாஸ் கூட்டணி மீண்டும் ஒரு புதிய திரைப்படத்தில் இணைய உள்ளது. இந்த திரைப்படத்தின் தலைப்பு 'வாள்' எனவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

மேலும் இந்த திரைப்படத்தில் ப்ரியங்கா சோப்ரா நடிப்பார் என்று செய்தி பரவியது. அதனை தொடர்ந்து தீபிகா படுகோன் நடிப்பார் எனவும் தகவல்கள் வெளிவந்தன. ஆனால் சற்று முன் கிடைத்த தகவலின் படிஇதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்க உள்ளாராம்.

விஜய்யுடன் ஏற்கெனவே ஜோடி சேரவிருந்தவர் சமந்தா. ஆனால் அப்போது அவருக்கு சரும நோய் பிரச்சினை இருந்ததால், அவருக்குப் பதில் அமலா பாலை தலைவாவில் ஜோடியாக்கிக் கொண்டார் விஜய்.

அப்போது தவற விட்ட வாய்ப்பை இப்போது மீண்டும் பெற்றுள்ளார் சமந்தா.இப்படம் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






You May Also Like

  Comments - 0

  • I’m a Expert Thursday, 23 January 2014 12:46 PM

    என்ன சொல்ல... விஜய் கூட நடிக்க அவங்க குடுத்து வெச்சிருக்கணும்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X