2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

நயன் தோழி; ஹன்சிகா காதலி; மனம் திறந்த சிம்பு

Menaka Mookandi   / 2014 பெப்ரவரி 20 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு நயன்தாராவுடன் 'இது நம்ம ஆளு' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனால், மீண்டும் அவர்களது பழைய காதல் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு விட்டது என்றும், அவர்கள் நிச்சயதார்த்தம் வரைப் போய் விட்டதாகவும் ஹன்சிகா - சிம்பு காதல் முறிந்து விட்டது எனவும் பல்வேறு தகவல்கள் வெளியாயின.

இதற்கிடையே, சமீபத்தில் சிம்புவின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு சர்ப்ரைஸ் தந்தார் ஹன்சிகா. மேலும், அதே நாளன்று ஹன்சிகாவைப் புகழ்ந்து, நயன்தாராவைத் திட்டி தான் பாடிய வாலு திரைப்பட பாடலை வெளியிட்டார் சிம்பு.

இந்நிலையில் ஆனந்தவிகடனுக்கு அளித்துள்ள பேட்டியில் 'நயன் என் தோழி தான், ஆனால் ஹன்சிகா என் காதலி' என தெளிவாக பதிலளித்துள்ளார் நடிகர் சிம்பு.

மேலும், இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, 'நான் என்னைக்குமே என் ரிலேஷன்ஷிப்பை மறைச்சது கிடையாது. ஆதே மாதிரி அதுல பிரச்சினைனாலும் நானே அதை வெளியே சொல்லுவேன். ஹன்சிகா அம்மாவுக்கு எங்க லவ் பிடிக்கலைனா, நாங்க எப்படி அடிக்கடி சந்திச்சுக்க முடியும்.

ஹன்சிகாவுக்கும் எனக்குமா ரிலேஷன்ஷிப்பில் நயன்தாராவுக்கு எந்த ரோலும் இல்லை. இப்போ சினிமாவில் ஹன்சிகா மத்த ஹீரோக்கள் கூட நடிக்கிறதை நான் தப்புனு சொல்ல முடியுமா? அப்படித்தான் நயந்தாரா என் கூட நடிக்கிறதையும் ஹன்சிகா பாக்குறாங்க.

ஆனா, அது எப்படி நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து நடிக்கலாம்? என்று டைஜஸ்ட் பண்ணிக்க முடியாதவங்க தான், கற்பனையான காரணங்கள் பரப்புறாங்க. ரொம்ப சிம்பிள்... நயன் என் தோழி, ஹன்சிகா என் காதலி.

சரியோ, தப்போ... வாழ்க்கையின் சில சேப்டர்களில் அவங்களும் இருந்திருக்காங்க. அதுக்கான மரியாதையைக் கொடுத்துத் தான் ஆகணும். இப்போ நம்ம பழைய டீச்சரைப் பாக்குறப்ப சட்டுனு ஒரு பரவசமாகி ஒரு சந்தோஷம் வரும்ல. டீச்சர் சொல்லிக் கொடுத்த சில விஷயங்களை நம்ம ஆயுளுக்கும் மறக்க முடியாதுல்ல.

அப்படித்தான் முன்னாள் காதலன் காதலியும் நம்ம லைஃப்ல சில பரவசங்கள் கொடுத்திருப்பாங்க. சில பாடங்கள் கத்துக் கொடுத்திருப்பாங்க. நமக்காக நிறைய விஷயங்கள் பண்ணியிருப்பாங்க.

அதுக்கான மரியாதையை என்னைக்கும் அவங்களுக்கு கொடுக்கணும், அதை மட்டும் செஞ்சாலே போதும். இன்னும் சிம்பிளா சொல்லணும்னா, அவங்களைப் பத்தின நல்ல விஷயங்களை மட்டும் நினைச்சுப் பார்ப்போமே.

இது நம்ம ஆளு படத்துல நயன்தாரா நடிக்கிறது டைரக்டர் பாண்டிராஜ் சாய்ஸ் தான். நயன்தாரா நடிக்கிறாங்கனு பாண்டிராஜ் சார் சொன்னப்ப, ஸ்பாட்ல ரெண்டு பேருக்கும் கம்பஃர்ட் லெவல் எப்படி இருக்கும், மீடியாவில் என்ன எழுதுவாங்க, ரசிகர்கள் ரசிப்பார்களா, வீட்ல என்ன சொல்லுவாங்கனு எந்த ஐடியாவும் இல்லை. பண்ணலாமா வேணாமானு ஒரு சின்னக் குழப்பம் மட்டும் இருந்தது. ஆனா, இப்ப ஆல் கிளியர்.

இந்தப்பட ஷீட்டிங் ஸ்பாட்ல எல்லாரும் ஏதோ ஒரு விஷயத்தை எதிர்பார்த்து எங்களையே பார்த்துட்டு இருந்த மாதிரி இருந்துச்சு. அதுவும் முதல் ரெண்டு நாட்கள் தான். அப்புறம் சரியாகிடுச்சு' என இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார் சிம்பு.


  Comments - 0

  • gomathy Thursday, 06 March 2014 11:37 AM

    நல்ல முடிவு.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X