2025 மே 19, திங்கட்கிழமை

உதட்டைக் குதறிய கங்கணா

Kogilavani   / 2014 ஏப்ரல் 21 , மு.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


முத்தக்காட்சியில் நடித்த போது நடிகை கங்கணா ரனாவத், கதாநாயகனின் உதட்டை கடித்து காயப்படுத்தி விட்டாராம். இதனால் காயம் ஆறியதும் அக்காட்சி ஒரு வாரம் கழித்து மீண்டும் சுபமாக படமாக்கப்பட்டதாம்.

தமிழில் ஜெயம் ரவியுடன் தாம்தூம் படத்தில் நடித்தவர் இந்திப்பட நடிகை கங்கணா ரனாவத். இவர் தற்போது பிரபல பொலிவுட் இயக்குநர் சாய் கபீர் இயக்கத்தில் ரிவால்வர் ராணி என்ற படத்தில் நடித்துள்ளார்.

 இத்திரைப்படம் எதிர்வரும் 25 ஆம் திகதி திரையிடப்படவிருக்கின்றது.இந்தப் படத்தில் கங்கணா ரனாவத், பியுஷ் மிஸ்ரா, வீர் தாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பில் கதாநாயகனின் உதட்டை கோபத்தில் நிஜமாகவே கடித்து விட்டாராம் கங்கணா.

என் காதல் சொல்ல வார்த்தையில்லை... அதாவது கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்னதாக கங்கணா, வீர் தாஸை தனிமையில் சந்தித்து அவரது காதலை உணர்த்துவது போன்ற முத்தக்காட்சியாம் அது.

அம்முத்தக் காட்சியில் நடிக்க கங்கணா ரனாவத் தயாராகி விட, நாயகன் வீர் தாஸ் தான் மிகவும் தயக்கத்துடனே காணப்பட்டாராம். பின்னர் அவருக்கு கங்கணா தைரியம் கொடுத்து நடிக்க வைத்துள்ளார்.

ஆனபோதும், முத்தக்காட்சி இயல்பானதாக வரவில்லை என இயக்குநனர் அதிருப்தி அடைந்துள்ளார். இதனால் ஆவேசமடைந்த கங்கணா, அடுத்த காட்சியில் முத்தம் கொடுத்த போது வீர் தாஸின் உதட்டை கடித்து காயப்படுத்திவிட்டாராம்.

நீச்சல் உடையில் தமன்னா

நடிகை தமன்னா கும்ஷகல் என்ற ஹிந்திப் படத்தில் நீச்சல் உடையில் நடிக்கிறார். தமன்னாவுக்கு 24 வயது ஆகிறது. தமிழ், தெலுங்கில் நிறைய படங்களில் நடித்துள்ளார்.

இரு மொழிகளிலும் கவர்ச்சிக்கு எல்லைக்கோடு வைத்து இருந்தார். முத்த காட்சியிலும் நீச்சல் உடையிலும் நடிக்க வில்லை. ஆனால் தற்போது முதல் தடவையாக ஹிந்தி படத்தில் நீச்சல் உடையில் வருகிறார்.
 
சமீபத்தில் ஹிந்தி, தெலுங்கு படங்களில் கலக்கும் இலியானா நீச்சல் உடையில் போஸ் கொடுத்து பரபரப்பு ஏற்படுத்தினார். இதனால் அவருக்கு படங்கள் குவிகிறதாம். இந்த போட்டியை சமாளிக்கவே தமன்னா நீச்சல் உடையில் நடிக்கிறாராம்.

படத்தின் இயக்குநர் சாஜித்கான் தயங்கியபடி நீச்சல் உடையில் நடிக்க முடியுமா என தமன்னாவிடம் கேட்டாராம். அவர் மறுப்பு சொல்லாமல் சம்மதம் தெரிவித்தாராம்.
 
இந்த படத்தில் சயீப் அலிகான், பிபாசாபாசு, ரிதேஷ் தேஷ்ணிக் போன்றோரும் நடிக்கின்றனர். இந்த படம் தமன்னாவுக்கு முக்கியத்துவமாக இருக்கும் என்கின்றனர். இதன் மூலம் இந்திப்பட மார்க்கெட்டை பிடிக்க திட்டமிட்டுள்ளார்.

அஜீத்துடன் இணைகிறார் விவேக்

வீரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அஜீத், அடுத்ததாக கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்து வருகிறார். ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார்.

ஸ்ரீ சத்ய சாய் மூவிஸ் நிறுவனம் சார்பில் ஏ.எம்.ரத்னம் தயாரிக்கும் இப்படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை.

இந்தப் படத்தில் அஜித்துடன் இணைந்து நகைச்சுவை நடிகர் விவேக் நடிக்க இருக்கிறார். இதற்கு முன்பு கிரீடம் படத்தில் அஜித்-விவேக் இருவரும் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அதேபோல கிட்டதட்ட 13 வருடங்களுக்குப் பிறகு கௌதம் மேனன் இயக்கும் படத்தில் விவேக் நடிக்கிறார். 2001-ல் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான மின்னலே படத்தில் நகைச்சுவை நடிகர் விவேக்கும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.

இப்படத்தினை தொடர்ந்து கௌதம் மேனன் நிறைய படங்களை இயக்கினாலும் அந்தப் படங்களில் விவேக் நடிக்கவில்லை.

இந்நிலையில் ஒரு பெரிய இடைவெளிக்குப் பிறகு கௌதம் மேனன், விவேக்குடன் மீண்டும் கைகோர்த்திருக்கிறார். அதேசமயம், கௌதம் மேனன் இயக்கத்தில் விவேக் நடிக்கும் இரண்டாவது படம் இதுவாகும்.

ஆர்யாவின் தம்பிக்கு நாயகன் அந்தஸ்து

அமர காவியம் எனும் படம் ஷோ பீப்பிள் என்கிற நிறுவனம் மூலம் ஆர்யாவினால்  தயாரிக்கப்படுகின்றது. இந்தப் படத்தில் ஆர்யாவின் தம்பி சத்யா நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக புதுணிகம் மியா ஜார்ஜ் அறிமுகமாகிறார்.
 
நான் திரைப்படம் மூலம் திரை உலகினரின் கவனத்தை ஈர்த்த ஜீவா ஷங்கர் ஒளிபதிவு செய்து இயக்கும் காதல் கதை இது. படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தது.

படம் குறித்து இயக்குநர் ஜீவா ஷங்கர் கூறும்போது, காதல் பற்றிய படங்கள் திரைப்படங்கள் தோன்றிய காலத்தில் வந்து கொண்டே தான் இருக்கிறது. காதல் ஒரு நூல் இழை போல, அதை திறம் பட நெய்து பார்பவரை கவர செய்வது ஒரு இயக்குனரின் கடமை. ஒவ்வொரு நெசவாளனுக்கும் ஒரு தனித்தன்மை உண்டு, அதை போலவே ஒவ்வொரு இயக்குனருக்கும் ஒரு ஸ்டைல் இருக்கும்.

நான்  படத்தில் ஒரு வித்தியாசமான திரை கதை அமைப்பில் கதையை சொல்லி இருப்பதை போல், முற்றிலும் ஒரு புதிய பாணியை இந்த படத்தின் திரைக்கதை அமைப்பில் கையாண்டு இருக்கிறேன் என்றார்.

நான் பொதுவாகவே கதையை எழுதும் போதே அந்த கதைக்கான களத்தில் இருந்தே, தட்ப வெப்பத்தையும் உணர்ந்து எழுதுவது வழக்கம். கதை களம் கதையின் நாயகன் நாயகிக்கு இணையாக முக்கியம். அதற்காகவே இதுவரை திரையில் காண்பித்திராத இடங்களை தேடி எடுத்து படப்பிடிப்பு நடத்தினேன்.

நானே ஒளிபதிவாளராக இருப்பது இந்த வகையில் எனக்கு பெரிதளவு உதவுகிறது. விஞ்ஞானத்தை போலவோ, மெய்ஞானத்தை போலவோ அல்ல காதல். நாம் அனுபவித்தது, உணர்ந்தது என வாழ்வில் ஐக்கியமாகி போன ஒரு உணர்வு. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவம் உண்டு, அமர காவியம் படத்தில் எல்லNhருடைய காதலும் இருக்கும் என்று கூறினார் ஜீவா ஷங்கர்.

தங்க மீன்களுக்கு 3 விருதுகள்

ராம் இயக்கிய தங்க மீன்கள் படம் 3 தேசிய விருதுகளை வென்றுள்ளது. மறைந்த இயக்குநர் பாலு மகேந்திராவின் தலைமுறைகள், தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் பிரிவில் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டது.
 
திரைப்படத் துறைக்கான 61ஆவது தேசிய விருதுகள் மத்திய அரசு அறிவித்தது. அதில், மாநில மொழி பிரிவில், சிறந்த தமிழ்த் திரைப்படமாக, தங்க மீன்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்தத் திரைப்படத்தில் நடித்த சாதானாவுக்கு சிறந்த குழந்தை நட்சத்திரம் விருது கிடைத்துள்ளது.
 
மேலும், தங்க மீன்கள் படத்தில் இடம்பெற்ற ஆனந்த யாழை பாடலுக்காக, சிறந்த பாடலாசிரியருக்கான விருதை நா.முத்துக்குமார் பெற்றார்.
 
தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் பிரிவில், சிறந்த படமாக பாலு மகேந்திராவின் தலைமுறைகள் தேர்வு செய்யப்பட்டு, நர்கீஸ் தத் விருது வழங்கப்படுகிறது.

தமிழின் வல்லினம் படத்துக்கு சிறந்த எடிட்டிங் (படத்தொகுப்பு) பிரிவில் சாபு ஜோசப்புக்கு தேசிய விருது கிடைத்துள்ளது.
சினிமா அல்லாத பிரிவில், தமிழில் வெளியான தர்மம் என்ற குறும்படம் சிறப்பு விருதை வென்றுள்ளது. இதை இயக்கியவர் மடோன் எம்.அஸ்வின்.

ஒரு குழந்தையின் பார்வையில் சமூகத்தின் ஏழ்மை நிலையையும், கையூட்டுப் பிரச்சினையும் ஒருங்கே பதிவு செய்த படைப்பு இது. பல்வேறு பிரிவுகளில் அதிக எண்ணிக்கையில் இம்முறை தேசிய விருதுகளை வென்றிருப்பது பெங்காலி மற்றும் மராத்தி மொழி படங்களே என்பது கவனிக்கத்தக்கது.

போங்கடி நீங்களும் உங்க காதலும்

ரீச்ட்ரீம் மீடியா சார்பில் குமரன், கார்த்திகேயன், முத்துராமன், செல்வராஜ் ஆகியோர் வழங்க கே.ஆர்.கே.மூவீஸ் கே.ஆர்.கண்ணன் தயாரிக்கும் படம் போங்கடி நீங்களும் உங்க காதலும்.

இதில் நாயகனாக எம்.ஏ.ராமகிருஷ்ணன் நடிக்கிறார். இவரே இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கவும் செய்கிறார். நாயகிகளாக ஆத்மியா, காருண்யா நடிக்கின்றனர். ஜெயபிரகாஷ், இமான் அண்ணாச்சி, சாமிநாதன், சென்ராயன் ஆகியோரும் நடிக்கின்றனர்.

படம் பற்றி எம்.ஏ.ராமகிருஷ்ணன் கூறுகையில்,

பெண்களின் பலம், பலவீனம், ஆண்கள் மீது வைத்திருக்கும் அசாத்திய நம்பிக்கை. அதை பல ஆண்கள் காப்பாற்றுவது இல்லை.

காதலிக்கும் போது இருக்கும் அன்பு அக்கறை திருமணத்துக்கு பின் குறைந்து வருகிறது. இதை சில ஆண்கள் தவறாக பயன்படுத்தி தற்போதைய தொழில்நுட்பங்கள் மூலம் பெண்களுக்கு மனதளவிலும் உடலளவிலும் இடையுறு தந்து சமூக அவலங்களுக்கு ஆளாக்கி வாழ்வை சிரழிக்கின்றனர்.

அப்படி ஒரு தப்பான நட்பு காதலால் ஏற்படும். பாதிப்புகளை பெண்களுக்கு உணர்த்தும் விதமாக உருவானதே இப்படம்.
இதில் நாயகன், நாயகி முத்த காட்சி உள்ளது. படம் பார்த்த தணிக்கை குழுவினர் பாராட்டி யு சான்றிதழ் அளித்துள்ளனர் இப்படம் இம்மாதம் இறுதியில் வெளியிடப்படவிருகின்றது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X