2025 மே 19, திங்கட்கிழமை

ரஜினியின் நாயகிக்கு பலத்த பாதுகாப்பு

Menaka Mookandi   / 2014 மே 14 , மு.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


மைசூரில் நடக்கும் ரஜினியின் லிங்கா படப்பிடிப்புக்கு இதுவரை இல்லாத அளவு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ரஜினி - சோனாக்ஷி காட்சிகள் படமாக்கப்பட்ட நாட்களில் சோனாக்ஷிக்கு மட்டுமே 50 பொலிஸார், 30 பவுன்சர்கள் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டார்களாம்.

லிங்கா படப்பிடிப்பில் ரஜினியும் சோனாக்ஷியும் நடித்துக் கொண்டிருந்தபோது, வெளியில் அடிக்கடி கூச்சல் கேட்டுக்கொண்டே இருக்குமாம். இதை கவனித்த ரஜினி, 'ஏன் இத்தனை கூட்டம், சத்தம்... இதுவரை இப்படி இருந்ததில்லையே' என்று கூறினாராம்.

சிலமுறை இந்த பாதுகாப்புக் கெடுபிடிகளையும் உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்த ரசிகர்கள் ரஜினியைப் பார்த்துவிடத் துடித்திருக்கிறார்கள். ரஜினியுடன் சோனாக்ஷியும் இருக்கும் காட்சியைப் பார்க்க பலரும் ஆவலுடன் வந்தார்களாம்.

மைசூர் அரண்மனைப் பகுதியில் ரஜினி - சோனாக்ஷி காட்சிகள் எடுக்கப்பட்ட போது, 50 பொலிஸார் மற்றும் 30 தனியார் பவுன்சர்கள் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டார்களாம்.

இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து படத்தின் தயாரிப்பு நிர்வாகி சுரேஷ் குமாரசாமி கூறுகையில், 'இதுவரை ரஜினியின் எந்தப் பட ஷூட்டிங்குக்கும் இந்த அளவு காவலர்கள் நியமிக்கப்பட்டதில்லை. இதுதான் முதல் முறை' என்றார்.

மேலும் அவர் கூறுகையில், 'ரஜினி சார் ஒரு சகாப்தம். அவருக்கான ரசிகர் கூட்டம் அனைவருக்கும் தெரியும். அவருடன் சோனாக்ஷியும் இருந்ததால் ரசிகர்கள் இன்னும் உற்சாகத்துடன் பார்க்க வந்தனர். சோனாக்ஷி இவ்வளவு பிரபலமாக இருப்பார் என்று நாங்கள் எதிர்ப்பார்க்கவில்லை' என்றார்.

முன்பு ரஜினி - ஐஸ்வர்யா ராய் நடித்த ரோபோ பட ஷூட்டிங்கில் கூட இந்த அளவு பொலிஸ் பந்தோபஸ்து போடப்பட்டதில்லை, பாதுகாவலர்கள் நிறுத்தப்பட்டதில்லை என்றும் சுரேஷ் குமாரசாமி தெரிவித்தார்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X