2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

நஸ்ரியாவின் திருமணம் ஒத்திவைப்பு

Menaka Mookandi   / 2014 மே 16 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


நஸ்ரியா மற்றும் ஜெய் நடிப்பில் உருவாகியுள்ள திருமணம் என்னும் நிக்காஹ் திரைப்படம், நாளை வெளியிடப்படவிருந்த நிலையில் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் வரி பிரச்சினை காரணமாகவே இந்த திரைப்படத்தில் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், எதிர்வரும் 23 அல்லது 24ஆம் திகதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது. இதே 23ஆம் திகதி தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள கோச்சடையான் திரைப்படமும் வெளியிடப்படவுள்ளது.

எனவே, இந்த திரைப்படத்துக்கு தியேட்டர்கள் கிடைக்குமா என்பது குறித்த சந்தேகமும் இருப்பதால் திருமணம் என்னும் நிக்காஹ் திரைப்படம் மீண்டும் ஒத்திவைக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இத்திரைப்படத்தில், நஸ்ரியா மற்றும் ஜெய் திருமணத்தின் போது நடக்கும் திடுக்கிடும் சம்பவத்தை எப்படி திருமண வீட்டார்கள் சமாளிக்கின்றனர் என்பதை விறுவிறுப்பாக எடுத்துள்ளனர்.

புதுமுக இயக்குநர் அனீஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள திருமணம் என்னும் நிக்காஹ், நஸ்ரியாவின் உண்மையான திருமணம் நடக்கவுள்ள நிலையில் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X