2025 மே 19, திங்கட்கிழமை

கோச்சடையான் வெளியீடு...

Kanagaraj   / 2014 மே 24 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


சூப்பர் ஸ்டார் ரஜினியின் படம் வெளியாகிறது என்றால், முன்பு தமிழகத்தில் தான் அது திருவிழா போல இருந்தது. ஆனால் இப்போது உலகம் முழுக்கவே அந்தப் பரபரப்பும் உற்சாகமும் பரவியிருப்பதைப் பார்க்க முடிகிறது.

'தலைவர் படம்... முதல் நாள் முதல் ஷோ பார்க்கணும்... நமக்கெல்லாம் இன்னிக்குதான் தீபாவளி என்பது' போன்ற வார்த்தைகளை இப்போது தமிழகம் தாண்டி பல இடங்களிலும் ரசிகர்கள் மத்தியில் பார்க்க முடிகிறது.

இன்று ரஜினி படங்களைக் கொண்டாடுவதில், அவரது தீவிர ரசிகர்களாக வாழ்க்கையை ஆரம்பித்த மத்திய தர வயதுக்காரர்களை விட,
பதின்மவயது இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்டுவதை உணர முடிகிறது.

குறிப்பாக பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் குழுவாகச் சேர்ந்த இளைஞர்கள், நேற்று கோச்சடையான் வெளியீட்டைக் கொண்டாடிய விதம் ரஜினியின் தாக்கம் எத்தகையது என்பதைப் புரிய வைத்தது. தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் கோச்சடையான் வெற்றிக்காக சிறப்பு பிரார்த்தனைகள், யாகங்கள் நடத்தினர் ரஜினி ரசிகர்கள்.

படத்துக்கும் அது பெரிய விளம்பரமாக அமைந்தது. இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தது மாதிரி, படம் வெளியாகும் நேற்று அத்தனை திரையரங்குகளும் ரஜினியின் கட் அவுட், தோரணங்கள், பேனர்களால் ஜொலித்தன. எந்தத் திரையரங்குக்குப் போனாலும், அங்கு ஒரு திருவிழா களைகட்டியிருப்பதைப் பார்க்க முடிந்தது.

வட இந்தியாவின் முக்கிய சேனல்கள் அனைத்தும் நேற்று முழுவதும் கோச்சடையான் வெளியீட்டை ரசிகர்கள் கொண்டாடிய விதத்தைப் படம் பிடிப்பதில்தான் மும்முரமாக இருந்தனர். இதற்கு முன் வெளியான ரஜினியின் படங்களுக்கு நடந்த கொண்டாட்டங்களை விட பல மடங்கு அதிக உற்சாகத்துடன் கோச்சடையான் வெளியீட்டை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.








You May Also Like

  Comments - 0

  • Sivasubramanian G Monday, 26 May 2014 04:00 AM

    ரஜினி படம் என்றாலே எல்லாருக்கும் ஒரு எதிர்பார்ப்பும் ஆவலும் தொற்றிக்கொள்ளும். ரசிகர்களுக்கு கேட்கவும் வேண்டுமா? கொண்டாட்டம்தான்..

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X