2025 மே 19, திங்கட்கிழமை

தப்ஸியின் அலறல்

Kogilavani   / 2014 மே 26 , மு.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஆடுகளம், வந்தான் வென்றான் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளவர் தப்ஸி. கோலிவுட், டோலிவுட்டில் சக ஹீரோயின்களால் நிலவும் கடும் போட்டி அவரை பின்னுக்கு தள்ளியுள்ளது.

இந்நிலையில், தற்போது நடித்து வரும் வை ராஜா வை என்ற திரைப்படத்தில் வில்லியாக நடிப்பதாக அண்மையில் தகவல் வெளியானது. இதனால் அவர் ஹீரோயினாக நடிக்க வரவிருந்த சில வாய்ப்புகள் கைநழுவிப் போகும் சூழல் உருவானது.

இதையறிந்து பயந்போன தப்ஸி, நான் வில்லியாக நடிக்கவில்லை என்று அலறல் பேட்டியளித்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில்,
 
வை ராஜா வை திரைப்படத்தில், சூதாட்ட விடுதிக்குச் சென்று பந்தயம் போட்டு சூதாடும் நவநாகரிகப் பெண்ணாக நடிக்கிறேன். ஹீரோ பக்கமோ, வில்லன் பக்கமோ ஆதரவாக செயற்படும் கதாபாத்திரம் கிடையாது.
 
வெளிப்படையாகவே சொல்வதானால், நான் வில்லியாக நடிக்கவில்லை. என் வாழ்க்கையில் நான் சூதாடியதும் கிடையாது. அதுபோன்று, சூதாட்ட விடுதிகளுக்கு  சென்றதும் இல்லை. அதிர்ஷ்டத்தின் மூலம் உழைக்க முடியும் என்று நான் நம்புவதில்லை. யாருக்கும் அப்படி அட்வைஸ் சொல்வதும் இல்லை.
 
எனது குணத்துக்கு நேர்மாறான வேடம் ஏற்று இத்திரைப்படத்தில் நடிக்கிறேன். என் வாழ்வில் முதல் முறையாக சூதாட்ட விடுதிக்கு செல்வதென்பது இந்த வேடத்துக்காகத்தான் என்று கவலையுடன் கூறியுள்ளார் தப்ஸி.

பொம்மையானாலும் உண்மையானாலும் ரஜினி என்றுமே சூப்பர் ஸ்டார்தான்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் திரையுலக வரலாற்றில், காலம் கடந்து நிலைத்து நிற்கும் திரைப்படமாக கோச்சடையான் அமைந்துள்ளது என்று நடிகரும் இயக்குநருமான ராகவா லோரன்ஸ் தெரிவித்துள்ளார்.
 
இது தொடர்பில் ராகவா லோரன்ஸ் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கோச்சடையான் திரைப்படத்தில் ரஜினி, மூன்று வேடங்களில் நடித்துள்ளார். அவர் பொம்மை போல நடிப்பது பற்றி பலர் பலவிதமான விமர்சனங்களை முன் வைத்தனர். ரஜினி பொம்மையாக நடிப்பது ரசிகர்களை திருப்திப்படுத்துமா என்றார்கள்.

படம் பார்த்த ரசிகர்களோ ஆரவாரத்துடன் கைதட்டி ரசிக்கிறார்கள். பொம்மையாக வந்தாலும், உண்மையாக வந்தாலும் சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டார் தான் என்பதை நிரூபித்திருக்கிறார்.
 
இந்த படம் சூப்பர் ஸ்டாரின் கலையுலகப் பயணத்தில் காலம் கடந்து நிலைத்து நிற்கும் படங்களில் ஒன்றாக இருக்கும். யாரிடமும் உதவியாளராக இல்லாமல் சௌந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின் ஹொலிவுட் தரத்துடன் ஒரு தமிழ்ப் படத்தை இயக்கி இருப்பது பாராட்டுக்குரியது.

இந்த படம் வழக்கம் போல் ரசிகர்களை மட்டுமல்லாமல் குடும்பத்தினரையும் திருப்பதிப்படுத்தும் புது முயற்சியாகும். இந்த முயற்சி வரும் காலத்தில் இது போன்ற படங்கள் தமிழில் தயாரிக்க முன்னுதாரணமாக இருக்கும். என்று அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் லோரன்ஸ்.

ஸ்ருதிக்கு எதிர்ப்பு

தன்னை ஆபாசமாகப் படம் பிடித்துவிட்டார்கள் என தெலுங்கு சினிமாக்காரர்களுக்கு எதிராக நடிகை ஸ்ருதி ஹாஸன் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து, அவருக்கு தெலுங்கில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இவர் ஆபாசமாக ஆடியதைத்தானே படமாக்கினோம். அதற்கு முறைப்பாடு செய்வதா என்று கேட்க ஆரம்பித்துள்ளனர்.
 
தெலுங்கில் முன்னணி நடிகையாகத் திகழும் ஸ்ருதி, அண்மையில் எவடு என்ற திரைப்படத்தில் படு கவர்ச்சியாக குத்தாட்டம் போட்டிருந்தார். இந்தப் படங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டன. கிட்டத்தட்ட அரை நிர்வாணம் எனும் அளவுக்கு அந்தப் படங்களில் ஆபாசம் தெறித்தது.

இந்தப் படங்கள், இரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தின. படத்தில் நடிக்கும்போது இதுபற்றி கவலையே படாமல், முன்னழகு வெளியில் பளிச்சென்று தெரியும்படி ஆடிய ஸ்ருதிக்கு, அதுவே புகைப்படங்களாக வெளியான போது அதிர்ச்சியாகிவிட்டது.

உடனடியாக படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜுவை தொடர்புகொண்டு பேசினார். அவரோ இந்த கவர்ச்சிப் படங்கள் எப்படி வெளியாகின என்று தனக்கு தெரியாது என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பொலிஸில் முறைப்பாடு செய்தார் ஸ்ருதி. தனது கவர்ச்சிப் படங்களை வெளியிட்டவர்களை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என்று தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டிருந்தார்.

எவடு திரைப்படத்தில் அவர் விருப்பத்தோடுதான் அந்தப் பாடல்காட்சி படமாக்கப்பட்டுள்ளது. அவருக்குத் தெரியாமல் இந்தப் படங்கள் எடுக்கவில்லை. ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் நடனமாடியபோது எடுத்த ஸ்டில்கள்தான் இவை.

எனவே இந்த முறைப்பாட்டில் உண்மையும் இல்லை, அர்த்தமும் இல்லை. தேவையில்லாத நெருக்கடியை ஸ்ருதிஹாஸன் உருவாக்கிவிட்டார் என தெலுங்கு படத் தயாரிப்பாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

வாய்ப்புக்காக பச்சை குத்திய கனிகா

ஃபைவ் ஸ்டார், ஆதிரை, டான்ஸர் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ள கனிகா தமிழில் கடைசியாக கடந்த 2006ஆம் ஆண்டு வெளியான வரலாறு என்ற திரைப்படத்தில் நடித்தார்.
 
அதன்பிறகு தமிழ் பக்கம் தலை வைக்காதவர் மலையாள திரைப்படங்களில் மட்டும் நடித்து வந்தார். இந்நிலையில், கடந்த 2008ஆம் ஆண்டு அமெரிக்க மாப்பிள்ளை ஷியாம் ராதாகிருஷ்ணன் என்பவரை மணந்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டார்.

ஒரு வருடத்திலேயே மீண்டும் நடிக்க வந்தார். பழஸி ராஜாவில் தொடங்கி தொடர்ச்சியாக அம்மா மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

திருமணத்துக்கு பிறகு படங்கள் தேடி வராததால் கனிகா வருத்தம் அடைந்துள்ளார். அம்மா வேடம் வந்தால் கூட போதும் என்ற தனது எண்ணத்தை வெளிப்படுத்தும் விதமாக சமீபத்தில் தனது வலது கை மேல்புறத்தில் குழந்தையை அன்பாக அரவணைத்து முத்தமிடும் தாய் உருவத்தை பச்சை குத்திக்கொண்டுள்ளார்.

நாசர் மகன் கவலைக்கிடம்

கடந்த சில தினங்களுக்கு முன்னர் விபத்தில் சிக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள, நடிகர் நாசரின் மூத்த மகன் பைசலின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தில் நாசரின் அக்கா மகன் உட்பட மூவர் மரணமடைந்தனர். பைசல் உட்பட இரண்டு பேர், சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

பைசல் தொடர்ந்து கவலைக்கிடமான நிலையிலேயே இருக்கிறார். அவர் கோமா நிலையில் இருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கிறன.

பைசலுக்கு தற்போது செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகவும் பிரபல நரம்பியல் நிபுணர் டாக்டர் சந்திரசேகர் தலைமையிலான மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள் என்றும் இன்று (26) பைசலுக்கு முக்கிய சத்திரசிகிச்சையொன்று மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
நாசரும் அவரது மனைவி கமீலா நாசரும் மருத்துவமனையிலேயே இருந்து மகனை கவனித்து வருகிறார்கள். கமீலா தொடர்ந்து கண்ணீரும், கம்பளமுமாகவே இருப்பதால் அவருக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் மைசூரில் படப்பிடிப்பில் இருக்கும் ரஜினிகாந்த், நாசரையும் அவரது மனைவியையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியுள்ளார். டாக்டர்கள் மீது நம்பிக்கை வையுங்கள். இறைவனிடம் சரணாகதி அடையுங்கள் என்று ரஜினி கூறியிருக்கிறார். சென்னை வரும்போது பைசிலை சந்தித்து பேசுவேன் என்றும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

கவர்ச்சிக்கு அம்மா குறுக்கிடமாட்டார்: துளசி

1980களில் முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்த ராதாவின் வாரிசுகளான கார்த்திகா, துளசி இருவரையும் திரையுலகம் பெரிதும் எதிர்பார்க்கிறது. அக்காவை  எப்படியாவது முந்திச்செல்ல வேண்டும் என்ற வெறியெல்லாம் துளசியிடம் இல்லை.
 
தேடி வந்த வாய்ப்புகளை ஒப்புக்கொண்டு நடித்து, அம்மாவுக்கு இருக்கும் நல்ல பெயரைக் கெடுக்காமல் இருந்தாலே போதும் என்றார் துளசி. இப்போது ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன் இயக்கும் யான் படத்தைப் பெரிதும்  எதிர்பார்க்கிறார். இந்நிலையில், அவர் அளித்துள்ள பேட்டியொன்றில் கூறியுள்ளதாவது,

அம்மாவும் நானும் கதை கேட்போம். ஆனால், இறுதி முடிவை நான்தான் எடுக்கணும்னு அம்மா சொல்வார். சினிமாவில் அவருக்கு நிறைய அனுபவம் உண்டு. அவருக்கு தெரிந்ததை எனக்கு சொல்வார் ஆனால், சுயமாக முடிவெடுத்து  செயற்படணும்னு வலியுறுத்துவார்.
 
அந்த தன்னம்பிக்கையை எனக்கு சின்ன வயதில் இருந்தே வளர்த்து வந்தார். ஆனால், இப்ப அக்கா கார்த்திகாவும் எனக்கு உதவி பண்றார். கதை கேட்டவுடனேயே அதில் என்ன பண்ணணும்னு முடிவாகிவிடும். எவ்வளவு தூரம் கிளாமரா நடிக்க முடியும்னு யோசிப்பேன்.

கடல் படத்தில் வந்த முத்தக்காட்சியும் ஒரு எல்லைக்கு உட்பட்டுதான் இருக்கும். வலுக்கட்டாயமா வரும் கிளாமர் காட்சிகளை உடனே மறுத்து விடுவேன். எனக்கும் சில பொறுப்புகள் இருக்கு. சினிமாவில் நடிப்பது ஒரு ஃபேஷன். அதையும் கடைசிவரை கண்ணியமா பண்ணணும்னு நினைக்கிறேன்.

இப்ப என் கவனம் முழுக்க படிப்பு, எக்ஸாம் பற்றி மட்டுமே இருக்கு. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு ஒருமுறை அம்மா வருவார். இன்னொருமுறை அப்பா வருவார். ஆனால், யாரும் என் நடிப்பு விடயத்தில் தலையிட மாட்டார்கள் என்று கூறியுள்ளார் துளசி.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X