2025 மே 19, திங்கட்கிழமை

சினிமாவிலிருந்து விடைபெற்றார் நஸ்ரியா...

Menaka Mookandi   / 2014 மே 28 , மு.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


திருமணத்துக்குப் பிறகு நடிப்பதில்லை என்று ஒருவழியாக முடிவு செய்து, அதை திரையுலகிலுள்ளவர்களுக்கும் சொல்லிவிட்டாராம் நடிகை நஸ்ரியா நஸீம்.

சினிமாவில் அறிமுகமானவுடன் பரபரவென புகழ் பெற்றவர் நஸ்ரியா. தமிழிலும் மலையாளத்திலும் நல்ல வாய்ப்புகள் கிடைத்தன. இந்த நேரத்தில் தனது வாய்த்துடுக்கால் சர்ச்சைகளிலும் சிக்கினார்.

இதற்கிடையில் திடீரென அவருக்கும் நடிகர் பகத் பாஸிலுக்கும் காதல் என செய்தி கிளம்பியது. அதே வேகத்தில் அந்தக் காதலை உறுதி செய்து, திருமண நிச்சயதார்த்தமும் செய்து கொண்டனர் நஸ்ரியாவும் பகத் பாசிலும். இருவருக்கும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் திருமணம் நடக்கவிருக்கிறது.

திருமணத்துக்குப் பிறகும் நடிக்க வேண்டும் என்பது நஸ்ரியாவின் ஆசை. ஆனால் பாஸில் வீட்டில் இதை விரும்பவில்லை. திருமணத்துக்குப் பிறகு நடிப்புக்கு குட்பை சொல்லிவிட வேண்டும் என வற்புறுத்தினர்.

இதனால், தான் நடிக்க ஒப்புக் கொண்டிருந்த மலையாளப் படங்களிலிருந்து விலகிக் கொண்டாராம் நஸ்ரியா. தமிழில் திருமணம் எனும் நிக்காஹ்தான் அவரது கடைசி படம்!




You May Also Like

  Comments - 0

  • waakkalan Wednesday, 28 May 2014 03:17 PM

    குட் பை!!!!!!!!!!!!!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X