2025 மே 19, திங்கட்கிழமை

இஸ்லாம் மதத்தை தழுவினார் நடிகை மோனிகா

Kanagaraj   / 2014 மே 31 , மு.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


நடிகை மோனிகா இஸ்லாம் மதத்திற்கு மாறினார். இவர் தன்னுடைய பெயரை எம்.ஜி.ரஹிமா என்று மாற்றிக்கொண்டார்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை மோனிகா அழகி, பகவதி, சிலந்தி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர். இவர் மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். இவர் தான் முஸ்லிமாக மதம் மாறிவிட்டதாக வெள்ளிக் கிழமையன்று நிருபர்களிடம் கூறினார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது,

'அவரசபோலீஸ் 100' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நான் சினிமாத்துறைக்கு வந்தேன். அப்போது எனக்கு இரண்டரை வயது. இதுவரை 69 படங்களில் நடித்துள்ளேன். என்னுடைய அப்பா இந்து மதத்தை சேர்ந்தவர். அம்மா கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். என்னுடைய சின்ன வயதிலேயே அப்பா இறந்துவிட்டார். அம்மாவின் அரவணைப்பில்தான் வளர்ந்தேன். சின்ன வயதில் இருந்தே குர்தா அணிந்துகொள்ள எனக்குப் பிடிக்கும். அந்த ஆர்வத்தில் இஸ்லாம் மதம் சார்ந்த புத்தகங்களை படிக்கத் தொடங்கினேன்.

அதுவே ஒரு கட்டத்தில் இஸ்லாம் மதத்தினை நான் தீவிரமாக பின்பற்ற காரணமாக அமைந்தது. இப்போது முழுமையாக இஸ்லாம் மதத்திற்கே மாறிவிட்டேன். எனது பெயரையும் எம்.ஜி.ரஹிமா என்று மாற்றிக்கொண்டுள்ளேன். மதம் மாறியதைத் தொடர்ந்து சினிமா உலகில் இருந்தும் விலக முடிவெடுத்துள்ளேன் என்றும் அவர் கூறினார்.







You May Also Like

  Comments - 0

  • SAMSUDEEN MN Saturday, 07 June 2014 04:18 AM

    மாசா அல்லாஹ்

    Reply : 0       0

    abdullha Friday, 20 June 2014 01:02 PM

    அல் ஹம்துலில்லாஹ.

    Reply : 0       0

    swiss hirama makkal Wednesday, 11 June 2014 04:59 AM

    காதாலுக்காக மாதம் மாறினால் தப்பேயில்லை...

    Reply : 0       0

    yousuf Tuesday, 10 June 2014 05:54 PM

    அல்ஹம்துலில்லாஹ்...

    Reply : 0       0

    yousuf Tuesday, 10 June 2014 05:51 PM

    மாசா அல்லாஹ்

    Reply : 0       0

    yohan Tuesday, 10 June 2014 07:16 AM

    முக்காடு போட்டல் எல்லாம் சரியாகிவிடுமா...?

    Reply : 0       0

    yohan Tuesday, 10 June 2014 07:10 AM

    கவர்ச்சியாக நடித்துவிட்டு இப்போ முக்காடு தேவையா....

    Reply : 3       1

    mohame Monday, 09 June 2014 12:35 PM

    47:2. ஆனால், எவர்கள் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, முஹம்மது மீது இறக்கி அருளப்பட்ட (வேதத்)தின் மீது - இது அவர்களுடைய இறைவனிடமிருந்து (வந்து)ள்ள உண்மையாக இருக்கிறது என்று நம்பிக்கை கொள்கிறார்களோ, அவர்களுடைய தீமைகளை அவர்களை விட்டும் போக்கி, அவர்களுடைய நிலையையும் சீராக்குகின்றான்.

    Reply : 0       0

    mohamed yakhoob Monday, 09 June 2014 12:33 PM

    அல்ஹம்து லில்லாஹ்... அல்லாஹ் உங்களை காப்பானாக. கடைசி வரை முஸ்லிமாகவே மரணிக்கச்செய்வாயாக

    Reply : 0       0

    mohamed yakhoob Monday, 09 June 2014 12:30 PM

    குர்ஆன் 3:195. ஆதலால், அவர்களுடைய இறைவன் அவர்களுடைய இப்பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டான்; “உங்களில் ஆணோ, பெண்ணோ எவர் (நற்செயல் செய்தாலும்) அவர் செய்த செயலை நிச்சயமாக வீணாக்க மாட்டேன், (ஏனெனில் ஆணாகவோ, பெண்ணாகவோ இருப்பினும்) நீங்கள் ஒருவர் மற்றொருவரில் உள்ளவர் தாம்; எனவே யார் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறினார்களோ மேலும் வெளியேற்றப்பட்டார்களோ, மேலும் என் பாதையில் துன்பப்பட்டார்களோ, மேலும் போரிட்டார்களோ, மேலும் (போரில்) கொல்லப்பட்டார்களோ, அவர்களுடைய தீமைகளை அவர்களை விட்டும் நிச்சயமாக அகற்றி விடுவேன்; இன்னும் அவர்களை எவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கின்றனவோ அந்தச் சுவனபதிகளில் நிச்சயமாக நான் புகுத்துவேன்” (என்று கூறுவான்); இது அல்லாஹ்விடமிருந்து (அவர்களுக்குக்) கிட்டும் சன்மானமாகும்; இன்னும் அல்லாஹ்வாகிய அவனிடத்தில் அழகிய சன்மானங்கள் உண்டு.

    Reply : 0       0

    mohamed yakhoob Monday, 09 June 2014 12:30 PM

    (குர்ஆன் 35:10. )எவன் இஸ்ஸத்தை - கண்ணியத்தை நாடுகிறானோ, அவன், எல்லாக் கண்ணியமும் அல்லாஹ்வுக்கே உரியதாகும் (என்பதை அறிந்து கொள்ளட்டும்); தூய்மையான வாக்குகளெல்லாம் அவன் பக்கமே மேலேறிச் செல்கின்றன; ஸாலிஹான (நல்ல) அமலை எல்லாம் அவன் உயர்த்துகிறான்; அன்றியும் எவர்கள் தீமைகளைச் செய்யச்சதி செய்கிறார்களோ அவர்களுக்குக் கடினமான வேதனையுண்டு - இன்னும் இவர்களுடைய சதித்திட்டம் அழிந்து போகும்.

    Reply : 0       0

    Nifras Monday, 09 June 2014 04:53 AM

    எண்ணங்களைக் கொண்டே செயல்கள் யாவும் அமையும்.....

    Reply : 0       0

    Ravi Saturday, 31 May 2014 07:27 AM

    காட்ட வேண்டியது எல்லாம் காட்டிவிட்டு இப்போ எதற்கு இந்த வேசம்...

    Reply : 0       0

    SAMSUDEEN MN Saturday, 07 June 2014 04:16 AM

    நல்லது

    Reply : 0       0

    Sab Friday, 06 June 2014 07:51 PM

    Masha Allah.. Nalla vidayam

    Reply : 0       0

    GOOD Wednesday, 04 June 2014 11:12 AM

    நல்ல விடயம்

    Reply : 0       0

    ibnuaboo Tuesday, 03 June 2014 03:56 PM

    மேலே உள்ள கொமென்ட் காரர்கள் எல்லாம் இந்த நடிகை இஸ்லாத்தில் இணைந்து கொண்டதை சகிக்கமுடியாது வயிற்றெரிச்சலை கக்கியுள்ளார்கள். பாவம் ஒருவர் கற்பனை கதை ஒன்றும் கூறியுள்ளார். நீங்களும் இஸ்லாத்துக்குள் வர அந்த நடிகைபோல் இஸ்லாமிய நூல்களை வாங்கி கற்றுப்பாருங்களேன்...

    Reply : 0       0

    Rock Monday, 02 June 2014 03:16 PM

    இது எல்லாம் ஒரு பொழப்பா...?

    Reply : 0       0

    chafer Monday, 02 June 2014 02:56 PM

    iyyo pavam

    Reply : 0       0

    Ismail Monday, 02 June 2014 10:19 AM

    செய்த பிழைகளை ஏற்று, இஸ்லாத்தை ஏற்றுள்ளார். பாராட்டுகிறோம்.

    Reply : 0       0

    logan Sunday, 01 June 2014 12:16 PM

    மதம் மாறுபவா்கள் நம்பிக்கையில்லாதவா்கள்....... இவா்களை விரைவில் எதிலும் மனதினைமாற்றிவிட முடியும்..

    Reply : 0       0

    GM Saturday, 31 May 2014 07:49 PM

    அழகி நடிகை இஸ்லாம் மதத்திற்கு மாறியது திடீர்னு நடந்த சமாசாரம் இல்லியாம். அவருக்கும், மலேசியாவில் உள்ள ஒரு தொழிலதிபர் மகனுக்கும் நெருக்கமான காதலாம். மலேசியாவுக்கு ஷூட்டிங் போன இடத்துல இந்த காதல் உருவாச்சாம். பெரும் பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த அந்த இளைஞனை கல்யாணம் பண்ணிக்க முஸ்லிமாக மாறணும். சினிமாவை விட்டு விலகணும்னு கண்டிஷன் போட்டாங்களாம். அதை ஏற்றுக்கிட்ட நடிகை நாலு வருஷத்துக்கு முன்னாடியே மதம் மாறினாராம். வருஷத்துல பாதி மாதம் மலேசியாவுலதான் இருப்பாராம். இப்போது மலேசிய குடும்பம் அழகி கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டதால வெளிப்படையத சொல்லிட்டாராம். விரைவிலேயே திருமணம் செய்து கொண்டு மலேசியாவில் செட்டிலாகப் போகிறாராம்.

    Reply : 0       0

    mohanaraja Saturday, 31 May 2014 11:21 AM

    ஓர் உண்மையான நடிகை...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X