2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

அஜீத், விஜயுடன் என்னை ஒப்பிட வேண்டாம்: சூர்யா

Menaka Mookandi   / 2014 ஜூலை 25 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


அஜீத், விஜய் போன்றவர்களுடன் என்னை ஒப்பிட வேண்டாம் என தன் ரசிகர்களுக்கும் மீடியாவுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார் நடிகர் சூர்யா.

நடிகர் சூர்யாவின் அஞ்சான் படத்துக்கு பெரிய எதிர்ப்பார்ப்பு கிளம்பியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஒரு பாட்ஷா மாதிரி, சூர்யாவுக்கு இந்த அஞ்சான் படம் அமையும் என்று திரையுலகில் பேசப்படும் அளவுக்கு படத்துக்கு பப்ளிசிட்டி செய்யப்பட்டு வருகிறது.

இன்னொரு பக்கம் சமீபத்தில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்த போது, தமிழ் சினிமாவில் சூர்யாவுக்கு நிகராக யாருமில்லை என்றும், அஜீத், விஜய்யை தாண்டி, அவர் முதல் நிலையில் இருப்பதாகவும் கூறினர். ரசிகர்களும் அவ்வாறே கோஷமெழுப்பினர்.

ஆனால் இதற்கு சூர்யா தன் விளக்கத்தை அளித்துள்ளார். அவர் கூறுகையில், 'எனக்கு இந்த மாதிரி ஒப்பிடுவதே பிடிக்காது. அதுவும் அஜித்தும், விஜய்யும் என்னை விட வயதிலும், அனுபவத்திலும் மூத்தவர்கள். அவர்களின் 25 ஆண்டு உழைப்புதான் அவர்களை இந்த அளவுக்கு உயர்த்தி இருக்கிறது. இது ஒரே இரவில் நடந்து விடக்கூடிய விஷயம் இல்லை.

ஆனால், எனக்கு இதைப் போன்று எந்த இலக்கும் இல்லை. புதிது புதிதாக எதையாவது கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில்தான் நான் ஒவ்வொரு படத்தையும் பார்த்துப் பார்த்து தேர்வு செய்கிறேன்.

எனக்குள் எந்த எதிர்பார்ப்புகளும் இல்லை. எந்த ஒப்பீடும் என்னை சலனப்படுத்தாது.. இனி அப்படிச் செய்யவும் வேண்டாம்' என்கிறார் சூர்யா.



  Comments - 0

  • rajivan Sunday, 03 August 2014 09:58 PM

    Super

    Reply : 0       0

    P. Anbazhagan. B.Sc Thursday, 21 August 2014 04:14 AM

    Super

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .