2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

காதலிக்க நேரமில்லை

George   / 2014 ஓகஸ்ட் 04 , பி.ப. 02:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


திருமணத்தை பற்றி சிந்திக்கவோ அல்லது காதலிக்கவோ எனக்கு நேரம் இல்லை என நடிகை தமன்னா தெரிவித்துள்ளார். அண்மையில் ஐதராபாத்தில் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியொன்றின் போது இவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

முன்னணி கதாநாயகியாக இருக்கும் நீங்கள் தெலுங்கு படமொன்றில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடுகிறீர்களே? ஏன்று கேட்டதற்கு, அந்த படத்தை எடுப்பவர்கள் ஆரம்பத்தில் எனது வளர்ச்சிக்கு துணையாக இருந்தவர்கள். எனவேதான் ஆட சம்மதித்தேன். சுருதிஹாசன் ஹிந்தியில் ஒரு பாடலுக்கு ஆடி உள்ளார். முன்னணி நடிகைகள் குத்தாட்டம் ஆடுவது தவறல்ல என்று தமன்னா கூறினார்.

மேலும், ஒரு பாடலுக்கு ஆட ரூ.2 கோடி வாங்கினீர்களாமே? ஏன்ற கேள்விக்கு பதிலளிக்கையில், எனக்கு எதிராக ஏன் இப்படி எழுதுகிறார்கள் என்று புரியவில்லை. நட்புக்காக தான் ஒரு பாட்டுக்கு ஆட சம்மதித்தேன். எவ்வளவு பணம் தரவேண்டும் என்பது படம் எடுப்பவர்களுக்கு தெரியும். வீணாக இதுபோல் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஹிந்தியில் நடித்த இரு படங்களும் தோற்று விட்டதே? ஏன்ற கேள்விக்கு பதிலளிக்கையில், படங்கள் தோல்வி அடைவதும் வெற்றி பெறுவதும் என் கையில் இல்லை. தெலுங்கில் முதலில் நடித்த படம் தோற்றது. தொடர்ந்து வந்த மேலும் இரு படங்களும் தோல்வியை தழுவின. ஹேப்பி டேஸ் படம் வெற்றிக்கு பிறகுதான் நான் காலூன்ற முடிந்தது. அதுபோல் ஹிந்தியில் 2 படங்கள் தோற்றாலும்கூட 3 ஆவது படம் ஜெயிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. தோல்விதான் வெற்றிக்கு முதல் படி என்றார்.

மேலும், தமிழில் சூர்யா ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதுடன் தெலுங்கில் பாகுபலி, ஆகடு படங்களில் நடிப்பதாகவும் அவர் கூறினார்.

திருமணம் பற்றி இன்னும் திட்டமிடவில்லை. திருமணத்தை பற்றி சிந்திக்கவோ அல்லது காதலிக்கவோ எனக்கு நேரம் இல்லை. பிசியாக நடிக்கிறேன். தினமும் மூன்று மணி நேரம்தான் தூங்குவதற்கு நேரம் கிடைக்கிறது என்றும் தமன்னா கூறினார். 




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .