2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

திருமணமே வேண்டாம்: லட்சுமி

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 08 , மு.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


தமிழ் திரை உலகில் இளம்வயது நடிகையான லட்சுமி மேனன், தற்போது தான் திருமணமே செய்து கொள்ளப்போவதில்லை என்ற திடுக்கிடும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கும்கி படத்தில் அறிமுகமானபோதே நான் எந்த மொழியில் நடித்தாலும் ஒரு மலையாளியைத்தான் காதலித்து திருமணம் செய்வேன் என்று அதிரடியாக அறிவித்தவர் லட்சுமிமேனன். அப்போதே அட ரொம்ப விபரமாகத்தான் இருக்கிறார் லட்சுமி என்று பலரும் கலாய்த்தனர்.

9ஆவது வகுப்பு படிக்கும்போது இப்படி அதிரடியாக அறிவித்தவர், இப்போது 11ஆம் வகுப்பு படிக்கும் நிலையில், திருமணமே செய்துகொள்ள மாட்டேன் என்று திடீர் முடிவெடுத்திருக்கிறார்.

நான் திருமணம் செய்து கொள்ளவே போவதில்லை. கல்யாணம் செய்து கொள்ளாமல் பலபேர் சாதித்துள்ளனர். எனக்கு மிகவும் பிடித்த சித்தார்த்துடன் நடித்து விட்டேன். அடுத்து விஜய், அஜித், மம்முட்டியுடன் நடிக்க வேண்டும் என்று நிறைய கனவுகள் இருக்கின்றன என்று தெரிவித்துள்ளார் லட்சுமி மேனன்.

முதலில், பிளஸ் 1 படிச்சு முடிக்கற வழியைப் பாருங்க அப்புறமா இதைப்பத்தியெல்லாம் பேசிக்கலாம் என்கின்றனராம் சில திரையுலகினர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .