2025 மே 19, திங்கட்கிழமை

நயன் - அனு போட்டி

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 11 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஹொலிவுட் திரைப்படத்தில் நடிக்க தமிழ் நடிகை ஒருவருக்கு அதிர்ஷ்டம் அடிக்கப் போகிறது. ஹொலிவூட்டில் தயாராகும் எக்ஸ்பென்டபிள் படத்தில் ஏழு நடிகைகள் நடிக்க உள்ளனர். வெளிநாடுகளில் நிகழ்வது போல் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டு உள்ளது.

இதனால் பல்வேறு நாடுகளை சேர்ந்த நடிகைகள் இதில் நடிக்க உள்ளனர். சில்வஸ்டர் ஸ்டாலன், மெல்கிப்ஸன் ஆகியோரும் இப்படத்தில் கௌரவ தோற்றத்தில் நடிக்கின்றனர்.

இந்திய நடிகைகளில் தமிழ் நடிகையை நடிக்க வைக்க படக்குழுவினர் விரும்புகின்றனர். நடிகையை தேர்வு செய்வதற்காக அடுத்த வருடம் படக்குழு இந்தியா வருகிறது. சென்னையிலும் மும்பையிலும் சுற்றுப் பயணம் செய்து நடிகையை தேர்வு செய்கின்றனர்.

கவர்ச்சியாகவும் சண்டை காட்சிகளில் நடிப்பவராகவும் இருப்பவரை பார்த்து தேர்வு செய்கிறார்கள். நயன்தாரா பில்லா படத்தில் இது போல் கலக்கி இருந்தார். அனுஷ்கா அருந்ததி படத்தில் வாள் சண்டை போட்டார். தற்போது நடித்து வரும் ருத்ரமாதேவி படத்திலும் ராணி வேடத்தில் குதிரையேற்றம், வாள் சண்டை சாகசங்கள் செய்கிறார்.

ராய் லட்சுமி, நீது சந்திரா, ஸ்ரேயா போன்றண்க்ரும் அக்ஷன் படங்களில் நடித்துள்ளனர். ஆனாலும் அனுஷ்கா, நயன்தாரா இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு கிட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



த்ரிஷாவின் மடக்கல் இரகசியம்


சீனியர், ஜூனியர்களுடன் ஜோடி போடும் இரகசியம் என்ன என்று த்ரிஷா கூறியுள்ளார். கடந்த 10 வருடத்துக்கும் மேலாக திரையுலகில் தனக்கான ஹீரோயின் இடத்தை தக்க வைத்துக்கொண்டிருக்கிறார் த்ரிஷா.

இது குறித்து அவர் கூறியுள்ளதாவது,

தமிழ், தெலுங்கு தவிர கன்னட திரைப்படத்தில் தற்போது புனித் ராஜ்குமாருடன் நடிக்கிறேன். புதிய இடத்தில் நடிப்பது கடினமாக இருக்கிறதா என்கிறார்கள். கடினம் என்பதைவிட புதிய இடம் மிகவும் வித்தியாசமான அனுபவம்.

ஹிந்தியில் கட்டா மிட்டா என்ற படத்தில் முதன்முறையாக நடித்தபோதும் அது எனக்கு புதிய படவுலகமாக இருந்தது. அக்ஷய், பிரியதர்ஷனுடன் இதில் பணியாற்றினேன் அது நடிப்புக்கான ஒரு அனுபவமாகவே அமைந்தது.

சீனியர் நடிகர்களுடன், புதுமுகங்களுடனும் நடிப்பது எப்படி என்கிறார்கள். பொதுவாகவே ஹீரோக்கள் திரையுலகில் பல ஆண்டுகள் நீடித்திருப்பார்கள். அவர்களுக்கு வாய்ப்பு இருந்துகொண்டே இருக்கும்.

ஒருவகையில் எனக்கும் அப்படியொரு அதிர்ஷ்டம் அமைந்திருக்கிறது. அதனால்தான் சீனியர் நடிகர்களுடனும் என்னால் நடிக்க முடிகிறது. தொடர்ச்சியாக மார்க்கெட் இருப்பதால் புதுணிகங்களுடனும் நடிக்க முடிகிறது என்று த்ரிஷா கூறியுள்ளார்.


சித்தார்த்துக்கு டும் டும் டும்


இந்த ஆண்டு இறுதிக்குள் நான் திருமணம் செய்து கொள்வேன். ஆனால் மணப்பெண் யார் என்பது சஸ்பென்ஸ் என்று நடிகர் சித்தார்த் கூறியுள்ளார்.

போய்ஸ், ஆயுத எழுத்து, தீயா வேலை செய்யணும் குமாரு, ஜிகர்தண்டா ஆகிய படங்களில் நடித்துள்ள சித்தார்த்துக்கும், நடிகை சமந்தாவுக்கும் காதல் இருந்து வருவதாகவும், இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் சினிமா வட்டாரத்தில் பரவலாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சித்தார்த் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இந்த ஆண்டு இறுதிக்குள் கண்டிப்பாக திருமணம் செய்து கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சித்தார்த், கடந்த முறை தீயா வேலை செய்யணும் குமாரு படத்தின் வெற்றியை தொடர்ந்து உங்களை சந்தித்தேன். இந்த முறை ஜிகர்தண்டாவின் வெற்றிக்காக சந்திக்கிறேன்.

விரைவில் நான் திருமணம் செய்துகொள்ளப் போகிறேன். மணப்பெண் யார் என்பதை இப்போது கூற மாட்டேன் என்று கூறியுள்ளார்.



கிங் கானின் கனவு


உலகத்தில் உள்ள அனைவரும் பார்த்து பாராட்டக்கூடிய வகையில் ஒரு சிறந்த படத்தை எனது வாழ்நாளில் தயாரிக்க வேண்டும் என்பதே என் கனவு என பொலிவூட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.

உலகமே வியந்து பாராட்டும் படியான படத்தை தயாரிக்க வேண்டும் என தனது மிகப் பெரிய கனவு பற்றிய கூறிய ஷாருக்கான், தனது சிறிய கனுவகளையும் பட்டியலிட்டுள்ளார். அதில் ஒன்று தனது 3 குழந்தைகளையும் ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் வளர்க்க வேண்டும் என்பது தானாம்.

ஷாருக்கான் தற்போது நடித்து வரும் மேட் அபவுட் டான்ஸ் என்ற படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய ஷாருக்கான் தனது கனவுகள் பற்றிய பேசிய போது இதனை தெரிவித்துள்ளார்.

1997ஆம் ஆண்டு ஷாருக்கான் நடித்து வெளியான பரேட்ஸ் படத்தின் 17ஆம் ஆண்டு விழாவும், சமீபத்தில் மெகாஹிட் ஆன சென்னை எக்ஸ்பிரஸ் படத்தின் ணிதல் ஆண்டு விழாவும் மும்பையில் கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் பேசிய ஷாருக், நான் எனது ஒவ்வொரு படத்தையும் முதல் படமாகவும், கடைசி படமாகவும் நினைத்தே பணியாற்றி வருகிறேன் என கூறினார். தனது அடுத்த படமான ஹப்பி நியூ இயர் படத்தில் ரெம்பவே மெனக்கெட்டு நடனம் ஆடி உள்ள ஷாருக்கான், எனக்கு ஆடத்தெரியாது. எனது புதிய புதிய படமான ஹேப்பி நியூ இயர் நடனம் சம்பந்தப்பட்டது.

அந்த படத்துக்காக நான் மிக கஷ்டப்பட்டு நடனம் ஆடி உள்ளேன். சுதந்திரத்தையும் அன்பையும் வெளிப்படுத்துவதே நடனம் என நான் நினைக்கிறேன். நடனம் நான் கற்றுக்கொள்ளும் முறையில் தான் உள்ளது என ஷாருக் பேசி உள்ளார்.



உடலை மாற்றும் ரித்திக்


மொஹஞ்சதரோ என்ற திரைப்படத்திற்காக, நடிகர் ரித்திக் ரோஷன் தனது கும்மென்ற ஜிம் உடலை மேலும் டெவலப் செய்யவுள்ளாராம்.

பொதுவாகவே பொலிவூட் நடிகர்கள் ஜிம் பாடி வைத்திருப்பார்கள். அதிலும் ரித்திக் ரோஷன் பெண்களை கவரும் வகையில் கும்மென்று உடலை வைத்திருப்பார். அவர் சட்டையில்லாமல் வரும் காட்சிகளில் அவரை பார்த்து அசரும் ரசிகைகள் ஏராளம்.

இந்நிலையில் அவர் தனது உடலை மேலும் டெவலப் செய்ய உள்ளாராம். ரித்திக் மொஹஞ்சதரோ என்ற படத்தில் நடிக்க உள்ளார். அந்த படத்துக்காக தான் அவரது உடம்பை மேலும் கும்மென்று ஆக்க உள்ளார்.

இதற்காக லண்டனில் உள்ள ஜோவா கைல் பேக்கரை மும்பைக்கு வரவழைக்குமாறு ரித்திக் படத்தின் தயாரிப்பாளரான சுனிதா கோவாரிகரை கேட்டுள்ளார். அவரும் சரி என்று கூறிவிட்டாராம்.

ஒவ்வொரு படத்திலும் தனது கதாபாத்திரத்துக்கு ஏற்றவாறு தனது உடல் அமைப்பை மாற்றுவார் ரித்திக் ரோஷன் என்பது குறிப்பிடத்தக்கது. மனைவி சூசன் பிரிந்து சென்றதில் இருந்து கவலையில் இருக்கிறார் ரித்திக். அவர் தனது கவலையை வேலை மூலமாக மறக்க முயற்சி செய்கிறார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X