2025 மே 19, திங்கட்கிழமை

ரஜினி மட்டுமே சூப்பர் ஸ்டார்: சூர்யா

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 12 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி சார் மட்டும்தான். வேறு யாரையும் அந்த பட்டத்தில் நினைத்துப் பார்ப்பது கூட கஷ்டமான விஷயம் என்று கூறியுள்ளார் நடிகர் சூர்யா.

சூர்யா நடித்த அஞ்சான் திரைப்படம் வெளியிடப்படவுள்ளது. இந்த திரைப்படம் தெலுங்கிலும் வெளியாகிறது. கேரளாவில் நேரடி தமிழ்த் திரைப்படமாக வெளியாகிறது.

இந்த திரைப்படத்தின் விளம்பரத்துக்காக கொச்சிக்கு சென்றிருந்தார் சூர்யா. அப்போது அவரிடம், 'இந்தியாவின் சூப்பர் ஸ்டார் சூர்யாதான் என அஞ்சான் இசை வெளியீட்டு விழாவில் சொன்னார்களே. அது பற்றி உங்கள் கருத்து என்ன?' என்று  கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த சூர்யா, 'இதெல்லாம் தப்புங்க. சூப்பர் ஸ்டார் ரஜினியின் படம் பார்த்து வளர்ந்தவன் நான். இந்தியாவில் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார்தான். அது ரஜினி சார் மட்டுமே.

அந்த பட்டப்பெயரில் வேறு யாரையும் நினைத்துப் பார்ப்பதே கஷ்டமாக உள்ளது. தயவு செய்து என் படங்களை ரஜினி சார், கமல் சார் படங்களோடு ஒப்பிடாதீர்கள்' என்றார்.


You May Also Like

  Comments - 0

  • a.v Wednesday, 13 August 2014 01:37 PM

    100 % correct

    Reply : 0       0

    ajay Thursday, 14 August 2014 10:39 AM

    ரஜினிக்கு பட்டம் கொடுத்தது மக்கள். எங்கள் இளய தளபதிக்கு பட்டம் கொடுத்ததும் மக்கள்.

    Reply : 0       0

    elsan Monday, 18 August 2014 05:28 PM

    super star oru பதவி இல்ல yaru venum la lum Vara super star NA. ரஜினிகாந்த் மட்டுமே...........

    Reply : 0       0

    mINI Thursday, 21 August 2014 09:13 AM

    தனக்கு தானே பட்டம் கொடுக்கும் அமுங்கிய விஜய்.. இளைய தளபதி தான் மக்கள் வைத்தது... காசு குடுத்து தான் தனக்கு தானே சூப்பர்ஸ்டார் என்டது...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X