2025 மே 19, திங்கட்கிழமை

கண் கலங்கிய ஹன்சிகா...

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 15 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஆர்யா நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் மீகாமன். இதில் இவருக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார். தமன் இசையமைத்துள்ளார். மகிழ்திருமேனி இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

இத்திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் ஆர்யா, இயக்குனர் மகிழ்திருமேனி, இசையமைப்பாளர் தமன், ஒளிப்பதிவாளர் சதீஷ்குமார், ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு மற்றும் படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.

இத்திரைப்படத்தைப் பற்றி இயக்குநர் பேசும் போது, மீகாமன் என்பதற்கு கேப்டன் ஆப் ஷிப் அதாவது ஒரு கப்பலை வழிநடத்துபவர் என்பது பொருள். இத்திரைப்படத்தை அக்ஷன் படமாக உருவாக்கியிருக்கிறேன். இதில் இரண்டு பாடல்கள் உள்ளது.

தமன் சிறப்பாக இசையமைத்து கொடுத்திருக்கிறார். இவ்விரண்டு பாடல் வரிகளை மதன் கார்க்கி எழுதியுள்ளார். இப்படம் ஆர்யாவுக்கு ஸ்டைலீசான அக்ஷன் படமாக இருக்கும் என்றார்.

மேலும் ஹன்சிகாவை பற்றி பேசும்போது, ஆர்யா - ஹன்சிகா இருவரும் நெருக்கமாக இருப்பது போல் ஒரு பாடல் காட்சியை படமாக்கினேன். அப்போது அந்த காட்சி எடுத்த பின்பு ஹன்சிகா கண் கலங்கினார்.

ரசிகர்கள் மத்தியில் எனக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அதை இப்பாடல் கெடுத்து விடும் என்ற அச்சத்தில் கண் கலங்கினார். பின்னர் அப்படி ஆகாது என்று கூறிய பிறகுதான் சமாதானம் ஆனார் என்று கூறினார்.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X