2025 மே 19, திங்கட்கிழமை

திருத்தமுடியாத 'கபடம்'

George   / 2014 ஓகஸ்ட் 19 , மு.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


எதிர்மறையான எண்ணங்களை கொண்ட ஒரு இளம் ஜோடியை பற்றிய கதையில் உருவாகியுள்ள கபடம் திரைப்படத்திற்கு தணிக்கை குழுவினர் ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

ஒரு இளம்ஜோடிகளுக்கு நிச்சயதார்த்தம் நடக்கிறது. அதன்பிறகு இருவரும் பழக ஆரம்பிக்கிறார்கள். அப்போது அந்த பெண்ணின் நடவடிக்கைகள் இளைஞனுக்கு பிடிக்காமல் போகிறது. அவளை திருத்திவிடலாம் என்று முயற்சிக்கிறான். முடியாததால், அவன் என்ன செய்கிறான் என்பதே கதை.

ஜோதிமுருகன் இயக்கத்தில் எம்.கே.மணி வசனம் எழுதியிருக்கிறார். சச்சின், அங்கனாராய் இருவரும் இளம் ஜோடிகளாக நடித்து இருக்கிறார்கள்.இந்த படத்துக்காக சாஷி இசையில் நா.முத்துக்குமார் 4 பாடல்களை எழுதியுள்ளார்.

இப்படம் எதிர்வரும் 22ஆம் திகதி வெளியாகவிருக்கிறது. இந்நிலையில், இப்படத்திற்கு சான்றிதழ் பெறுவதற்காக தணிக்கை குழுவினருக்கு காண்பிக்கப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர்.

தல அஜீத்குமார் அறிமுகமான அமராவதி மற்றும் தலைவாசல் ஆகிய படங்களை தயாரித்த சோழ பொன்னுரங்கத்தின் சோழா கிரியேஷன்சும், மவுண்டன் மூவி மேக்கர்ஸ் நிறுவனமும் இணைந்து கபடம் படத்தை தயாரிக்கிறமை குறிப்பிடத்தக்கது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X