2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

காதலில் கரையேறும் சென்ராயன்

George   / 2014 ஓகஸ்ட் 21 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


வில்லன், காமெடி என்று பல்வேறு வேடங்களில் நடித்து வரும் நடிகர் சென்ராயன் விரைவில் தன் காதலியை கரம் பிடிக்கவுள்ளாராம்.

பொல்லாதவன் படத்தில் பைக் திருடனாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான சென்ராயன், தொடர்ந்து பல திரைப்படங்களில் சிறு வேடங்களில் நடித்து வந்ததுடன் ஜீவா நடித்த ரௌத்திரம் படத்தில் வில்லனாக பரிணாமம் காட்டினார்.

கயல்விழி என்பவரை காதலித்து வந்த இவர், இரு வீட்டாரின் பூரண சம்மதத்துடன் எதிர்வரும் 31ஆம் திகதி திருமணம் செய்துகொள்ளவுள்ளார்.

வத்தலகுண்டு பகுதியில் உள்ள சென்ராயப் பெருமாள் கோயிலில் இவரது திருமணம் நடைபெறவுள்ளதுடன் திருமணத்தில் கலையுலகைச் சேர்ந்த பலரும் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .