2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

லட்சுமி மேனன், துளசி, கார்த்திகாவுக்கு தடை கோரி வழக்கு

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 22 , மு.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


தமிழ் திரைப்படங்களில் 18 வயது கூட பூர்த்தி அடையாத பெண்களை நடிக்க தடை செய்ய வேண்டும் என்று கோரி முத்துலட்சுமி என்ற பெண் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நலன் ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

தமிழகத்தில் இப்படி ஒரு வழக்கு இதுவரை தொடரப்பட்டதில்லை என்பதால் இந்த வழக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் 18 வயது கூட நிரம்பாத இளம் பெண்களை சினிமாவில் நடிக்க அனுமதிக்கக் கூடாது. அதைத் தடை செய்ய வேண்டும் என்று முத்துலட்சுமி கோரியுள்ளார்.

முத்துலட்சுமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இதுதொடர்பாக பொது நலன் மனுவை நேற்றுத் தாக்கல் செய்தார். அதில், இளம் பெண்களை இப்போது சினிமாக்களில் அதிக அளவில் நடிக்க வைக்கிறார்கள். ஆனால், இளம் பெண்களை படத்தில் நடிக்க வைக்கக் கூடாது.

தமிழ் படங்களில் கதாநாயகிகளாக நடித்து வரும் துளசி, லட்சுமி மேனன், சந்தியா, கார்த்திகா ஆகியோர் 18 வயது பூர்த்தியடையாதவர்கள். இவர்கள் கவர்ச்சியாகவும், முத்தக் காட்சியிலும் நடிக்க வைக்கப்படுகிறார்கள். பெண்களை தவறாக சித்தரிப்பதை தடை செய்யும் சட்டத்திற்கு கீழ், இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் முத்துச்செல்வி கூறியுள்ளார்.

இந்த மனு இன்று தலைமை நீதிபதி தலைமையிலான முதன்மை பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கு தமிழத் திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மனுவில் கூறப்பட்டுள்ள துளசி, கார்த்திகா ஆகிய இருவரும் முன்னாள் நடிகை ராதாவின் மகள்கள். லட்சுமி மேனனும் கூட இளம் நடிகைதான். இவர்கள் மட்டுமல்லாமல் இன்னும் பல இளம் நடிகைகள், குறிப்பாக 16 முதல் 18 வயதுக்குட்பட்ட நடிகைகள் பலர் சினிமாவில் நடித்து வருகின்றனர்.

சினிமா ஆசை கொண்ட இப்படி டீன் ஏஜ் வயது கொண்ட பெண்கள் பலர் தவறான ஏஜென்டுகளிடம் சிக்கி சீரழியும் நிலையும் தமிழ் சினிமா உலகில் இருந்து வருகிறது. இந்த நிலையில் இப்படி ஒரு வழக்குப் போடப்பட்டுள்ளது.



  Comments - 0

  • Kishore M Friday, 22 August 2014 04:48 PM

    சூப்பர்....

    Reply : 0       0

    indira Saturday, 23 August 2014 08:44 AM

    இது கண்டிக்கத்தக்கது. தன் 18 வயது முடியாத இளம் பெண்கள் திரைப்படத்தில் நடிக்கக் கூடாது...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .