2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

சமந்தா வழியில் த்ரிஷா

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 26 , மு.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


தென்னிந்தியத் திரையுலகில் தற்போது புதிதாக ஒரு போட்டி எழுந்துள்ளது. நடிப்பிலும், சம்பளத்திலும்தான் நடிகர், நடிகைகள் போட்டி போடுவார்கள் என்று சொல்வார்கள். தற்போது நடிகைகளுக்குள்ளும் ஒரு போட்டி எழுந்துள்ளது.

நீச்சல் உடை என அழைக்கப்படும் பிகினியில் நடிப்பதுதான் அந்த போட்டி. அஞ்சான் படத்தில் சில நிமிடங்களே வரும் ஒரு காட்சியில் பிகினி உடையில் சமந்தா நடித்து அனைவரையும் பேச வைத்துவிட்டார்.

தென்னிந்திய நடிகைகளில் சமீப காலமாக யாருமே அப்படி நடிக்காத நிலையில் சமந்தாவின் இந்த புதிய அஞ்சாத அவதாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. அவருக்கடுத்து தற்போது த்ரிஷா பிகினி உடையில் தோன்ற உள்ளாராம்.

அவர் எங்கே தமிழ்ப் படங்களில் நடிக்கிறார் என கேள்வி கேட்பவர்களுக்கு, அவர் அப்படித் ஒரு கன்னடப் படத்தில், தமிழ்ப் படத்தில் அல்ல. கன்னடத் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான புனித் ராஜ்குமார் ஜோடியாக த்ரிஷா கன்னடத்தில் அறிமுகமாகும் பவர் படத்தில்தான் பிகினி உடையில் நடித்திருக்கிறாராம்.

இப்படம் இன்னும் இரண்டு நாட்களில் வெளியாக உள்ளதாம். தெலுங்குத் திரையுலகை ஒரு கலக்குக் கலக்கியதைப் போலவே த்ரிஷா கன்னடத் திரையுலகிலும் ஒரு கலக்கு கலக்குவார் என்கிறார்கள்.

த்ரிஷாவின் நீச்சல் உடை தோற்றத்திற்குப் பிறகு இன்னும் யாரெல்லாம் அப்படி நடிக்கத் தயாராக இருக்கிறார்களோ என ஆச்சரியத்தில் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.






  Comments - 0

  • Kumaran Tuesday, 26 August 2014 10:00 AM

    நல்லவள்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .