2025 மே 19, திங்கட்கிழமை

சிறுவர்கள் பார்க்கக்கூடாத 'மர்தானி'

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 28 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


பிரபல பொலிவூட் கதாநாயகி ராணி முகர்ஜியின் நடிப்பில் அண்மையில் வெளியாகியுள்ள மர்தானி என்ற ஹிந்தி திரைப்படம், வசூலை வாரிக் குவித்து வருகின்றது.

இந்த திரைப்படத்தில் ராணி முகர்ஜியின் நடிப்பை வெகுவாக பாராட்டியுள்ள பொலிவூட் நடிகர் அமீர்கான், மர்தானி படத்தில் வன்முறை மற்றும் விரும்பத்தகாத காட்சிகளும், கொச்சையான வசனங்களும் இடம்பெற்றுள்ளதால் குழந்தைகள் இந்தப் படத்தை பார்க்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக தனது சத்யமேவ் ஜயதே டி.வி. தொடர் நிகழ்ச்சியின்போது கருத்து கூறிய அமீர்கான், கருத்து சுதந்திரத்தை மதிக்கும் நான் மர்தானி படத்தை பார்த்த வகையில் அதில் ஏராளமான வன்முறைக் காட்சிகள் வருகின்றன.

ராணி முகர்ஜியை நான் மிகவும் மதிக்கிறேன். எனது கருத்துக்கு மாறுபாடான கருத்து அவருக்கு இருக்கக்கூடும்.

எனினும், வன்முறையின் தாக்கம் இல்லாமல் வளர வேண்டும் என்பதால் இந்தப் படத்தை குழந்தைகள் பார்க்கக் கூடாது என்று நான் விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.




You May Also Like

  Comments - 0

  • nagarajan Sunday, 31 August 2014 01:50 AM

    Ok I need to

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X