2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

சூர்யாவின் புதிய பயணம்

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 07 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


மணிரத்னத்தின் தயாரிப்பில் விஜயுடன் இணைந்து சூர்யா நடித்த முதல் திரைப்படமான நேருக்கு நேர், கடந்த 1997ஆம் செப்டெம்பர் 6ஆம் திகதி வெளிவந்தது.

அந்த வகையில் நடிகர் சூர்யா சினிமாவுக்கு வந்து சனிக்கிழமையோடு 17 வருடங்கள் முடிந்து, 18ஆவது வருடத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.

சிவகுமாரின் மகனான சரவணனை, சூர்யாவாக மாற்றி நேருக்கு நேர் படத்தில் ஹீரோவாக அறிணிகப்படுத்தியவர் இயக்குநர் வசந்த்.

நடிகரின் மகனாக இருந்தாலும், நடிப்பில் தேர்ச்சியடையாதவராக இருந்த சூர்யா, நந்தா, பிதாமகன், மௌனம் பேசியதே ஆகிய படங்களில் நடித்த பிறகு மிகப்பெரிய நடிகராக உருவெடுத்தார்.

காக்க காக்க, வாரணம் ஆயிரம் ஆகிய படங்களும் வெற்றியடைந்து சூர்யாவை மேலும் உயரத்துக்குக் கொண்டுபோனது.

ஹரியின் இயக்கத்தில் வெளிவந்த ஆறு, வேல், சிங்கம், சிங்கம் 2 ஆகிய திரைப்படங்கள் சூர்யாவுக்குள் இருந்த அக்ஷன் ஹீரோவை அடையாளம் காட்டின.

இந்தப் படங்கள் மட்டுமின்றி கே.வி.ஆனந்தின் அயன், ஏ.ஆர்.முருகதாஸின் கஜினி போன்ற சூப்பர் ஹிட் படங்களும் சூர்யாவை உச்சத்துக்கொண்டு போயின.

பேரழகன் படத்தில் கூன் விழுந்த மனிதனாக, கஜினியில் மொட்டைத்தலை மறதி வியாதிக்காரராக, வாரணம் ஆயிரம் படத்தில் சிக்ஸ்பேக் இளைஞராகவும், 65 வயது முதியவராகவும், ஏழாம் அறிவு படத்தில் போதி தர்மராக, மாற்றான் படத்தில் ஒட்டிப்பிறந்த இரட்டையராக என சூர்யாவின் வித்தியாசமான கதாபாத்திரங்கள், ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தின.

அதுமட்டுமல்ல, திரைப்படத்துக்கு திரைப்படம் என தனது கதாபாத்திரங்களை மாற்றி நடிப்பதில் கமலுக்குப் பிறகு சூர்யாதான் என்ற இமேஜ், ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இந்த 17 வருடங்களில் சூர்யா நடித்திருப்பது வெறும் 30 திரைப்படங்கள்தான். ஆனால் 30 திரைப்படங்களில் வெரைட்டியும் வித்தியாசமும் விரவிக்கிடக்கின்றன. அதுதான் சூர்யாவை இன்னும் இரசிக்க வைக்கிறது.




  Comments - 0

  • Arockia Samy A Tuesday, 09 September 2014 01:15 PM

    எனக்கு ரொம்ப பிடிச்சவர். நான் அவரோட எல்லா படத்தையும் பார்த்திருக்கேன். இன்னும் பார்த்துக்கிட்டே தான் இருப்பேன்...

    Reply : 0       0

    Arockia Samy A Tuesday, 09 September 2014 01:19 PM

    எனக்கு பிடிச்ச ஹீரோ சூர்யா சார் தான்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .