2025 மே 19, திங்கட்கிழமை

இலியானாவின் லக்...

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 10 , மு.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


டோலிவூட்டில் கோடிக் கணக்கில் சம்பளம் வாங்கி கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்தார் நடிகை இலியானா. திடீர் என்று ஒரு நாள் நான் பொலிவூட்டில் செட்டிலாகப் போகிறேன் என்று மூட்டை முடிச்சைக் கட்டிக் கொண்டு மும்பைக்கு சென்றுவிட்டார்.

அவர் நடிப்பில் வெளியான முதல் இந்தி படமான பர்ஃபியை பார்த்து அமிதாப் பச்சனே இலியானாவை பாராட்டினார். பர்ஃபியை அடுத்து படா போஸ்டர் நிக்லா ஹீரோ படத்திலும், மெய்ன் தேரா ஹோ படத்திலும் நடித்தார்.

பொலிவூட்டில் நடிக்கும் அனைவருக்கும், யஷ் ராஜ் பிலிம்ஸ் பேனரில் ஒரு படமாவது நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அந்த ஆசை அனைவருக்கும் நிறைவேறிவிடாது.

ஹிந்தியில் வளர்ந்து வரும் நடிகையான இலியானாவுக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. அவர் யஷ் ராஜ் பிலிம்ஸ் ஷாருக்கானை வைத்து எடுக்கும் ஃபேன் படத்தில் நடிக்க உள்ளாராம்.

ஃபேன் படத்தில் ஷாருக்கான் ஜோடியாக நடிக்க பல முன்னணி நடிகைகளின் பெயர்கள் அடிபட்டது. ஆனால் இறுதியில் தேர்வாகியிருப்பது இலியானா என்று கூறப்படுகிறது. மனீஷ் சர்மா இயக்கும் ஃபேன் படத்தின் படப்பிடிப்பு வரும் ஒக்டோபர் மாதம் ஆரம்பிக்கிறது.

தீபிகா படுகோனே புதுமுகமாக அறிமுகமானது ஷாருக்கான் படத்தில் தான். அதன் பிறகு அவர் மிகவும் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

தீபாவளிக்கு ரிலீஸாகும் தனது ஹேப்பி நியூ இயர் பட விளம்பர நிகழ்ச்சிகளில் பிசியாக உள்ளார் ஷாருக்கான். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக தீபிகா நடித்துள்ளார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X