2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

உயிர் காத்த சிம்பு

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 22 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


பல சர்ச்சைகளுக்கு பேர் போனவர் நடிகர் சிம்பு. இவர் கதாநாயகன் ஆனதில் இருந்தே பல கிசு கிசுக்கள் மற்றும் சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். முதலில் வல்லவன் படத்தில் நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்த பிறகு அவருடன் காதல் எற்பட்டது.

பின்னர் இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார்கள். பின்னர் வாலு படத்தில் ஹன்சிகாவுடன் ஜோடி சேர்ந்த பிறகு அவருடன் காதல் ஏற்பட்டது. பின்னர் இருவரும் அதிகாரப்பூர்வமாக பிரிந்து விட்டதாக அறிக்கை விட்டனர்.

தற்போது சிம்பு ஒரு ஹோட்டலில் நடிகை ஹர்ஷிகாவிற்கு பொது இடத்தில் முத்தம் கொடுப்பதுபோல் வெப் கேமராவில் பதிவாகியுள்ள படம் இண்டர்நெட்டில் வேகமாக பரவி வருகிறது.

இப்படி ஒரு பக்கம் பல சர்ச்சைகள் மற்றும் கிசு கிசுக்களில் சிக்கி வந்தாலும், மறுபக்கம் சத்தமே இல்லாமல் பல நல்ல விடயங்களையும் செய்து வருகிறார்.

அண்மையில் அப்படி அவர் செய்த உதவியை பேஸ்புக் பக்கத்தில் அவரால் பயனடைந்தவரே கூறியுள்ளார். இதில் வைத்தியசாலையில் உயிருக்கு போராடிய தன் குழந்தையை சிம்பு காப்பாற்றினார் என்று அதில் தெரிவித்திருந்தார். மேலும் சிம்புவிற்கு மனப்பூர்வமான நன்றியும் கூறியுள்ளார்.





  Comments - 0

  • niyas Thursday, 25 September 2014 03:38 AM

    நல்லதையே செய் சிம்பு

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .