2025 மே 19, திங்கட்கிழமை

த்ரிஷாவின் புலிப் பாசம்...

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 26 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


டெல்லி விலங்கியல் பூங்காவில் இளைஞர் ஒருவரைக் கொன்ற வெள்ளை புலி விஜயை கொலை செய்ய வேண்டாம் என்று நடிகை த்ரிஷா, இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

டெல்லி விலங்கியல் பூங்காவில் உள்ள வெள்ளை புலி விஜய், கடந்த செவ்வாய்க்கிழமை 20 வயது இளைஞரொருவரை கடித்துக் குதறி கொலை செய்தது.

அந்த புலி யாரையும் கொன்றது கிடையாது என்று பூங்கா ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தை அடுத்து அந்த புலியை பார்க்க விலங்கியல் பூங்காவில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.

இந்நிலையில் அந்த புலியை கொலை செய்து விடாதீர்கள் என்று கூறி பலர் இணையதளத்தின் ஊடாக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கடிதம் எழுதுகிறார்கள்.

விலங்கு பிரியரான நடிகை த்ரிஷாவும் புலியை கொன்றுவிட வேண்டாம் என்று கூறி பிரணாபுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இந்த கோரிக்கையை அவர் ட்விட்டர் மூலம் விடுத்துள்ளார்.



You May Also Like

  Comments - 0

  • krishnakumar Thursday, 09 October 2014 12:07 AM

    திரிஷாவின் ஆசை நிறைவேறும்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X