2025 மே 19, திங்கட்கிழமை

ஆப்பு வைத்த 'ஆகடு'

George   / 2014 செப்டெம்பர் 30 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


தமன்னா, மகேஷ்பாபு நடித்த ஆகடு படம் வசூலில் தோல்வியைத் தழுவியுள்ளதால் பட விநியோகஸ்தர்கள் ஏகப்பட்ட நஷ்டத்தில் உள்ளனராம்.

'ஆகடு' படம் அண்மையில் வெளியானது. பிற மொழிகளில் இதனை ரீமேக் செய்ய போட்டி போட்டனர்.

இந்த படம் வெற்றிகரமாக ஓடியதாகவும் கோடிக்கணக்கில் வசூல் குவித்ததாகவும் கூறி வந்தனர். ஆனால் விநியோகஸ்தர்கள் தரப்பு இதனை மறுத்துள்ளது.

படம் தோல்வி அடைந்ததாகவும், பெரிய வசூல் என போலியாகக் கணக்கு காட்டுகின்றனர் என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

நெல்லூர் பகுதியில் எதிர்பார்த்ததைவிட மிகவும் குறைவான தொகையே வசூலானதாம். இதனால் அந்த பகுதி விநியோகஸ்தர் அதிர்ச்சி அடைந்ததாகவும், இந்தப் படத்தால் அவருக்கு மட்டும் 2 கோடி இந்திய ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

ஆகடு படத்தின் வெற்றியால் தனது புகழ் மேலும் அதிகரிக்கும் என்று நினைத்திருந்த தமன்னாவுக்கு ஆகடு பட தோல்வி அதிர்சியளித்துள்ளதாக திரையுலக வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X