2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

அக்காவை விட தங்கை ஜாலி

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 03 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

அக்கா கார்த்திகாவை விட தங்கை துளசியுடன் நடித்தது தான் ஜாலியான அனுபவம் என்று நடிகர் ஜீவா தெரிவித்துள்ளார். 

நடிகை ராதாவின் மகள்கள் கார்த்திகா மற்றும் துளசி ஆகியோர் படங்களில் நடித்து வருகிறார்கள்.

கார்த்திகாவுக்கு தமிழில் கோ படம் மட்டுமே ஓடியது. துளசி அறிமுகமான கடல் படம் ஓடவில்லை.

இதையடுத்து தான் அவர் யான் படத்தில் நடித்துள்ளார்.

கோ மற்றும் யான் படங்களின் நாயகன் ஜீவா. அக்கா, தங்கையுடன் நடித்தது குறித்து ஜீவா கூறுகையில்,

கோ படத்தில் பாடல்களை தவிர எனக்கும், கார்த்திகாவுக்கும் இடையே பெரிதாக ரொமான்ஸ் காட்சிகள் எதுவும் கிடையாது.

யான் படத்தில் துளசியுடன் நிறைய ரொமான்ஸ், ஜாலியான காட்சிகள், நிறைய நடனம், கொஞ்சம் முத்தக் காட்சிகளும் உண்டு.

நீ என்னில் பாதி வயது தான், அதனால் என்னை அங்கிள் என்று அழைக்கக் கூடாது என நான் துளசியை முதன்முதலாக பார்த்தபோது அவரிடம் தெரிவித்தேன்.

யான் படப்பிடிப்பு 2 ஆண்டுகளாக நடைபெற்றது. மொராக்கோவில் படப்பிடிப்பு நடந்தபோது நானும், துளசியும் நண்பர்களாகிவிட்டோம்.

கார்த்திகாவுடன் ஒப்பிடுகையில் துளசியுடன் நடித்தது தான் ஜாலியான அனுபவம் என்று ஜீவா தெரிவித்துள்ளார்.




  Comments - 0

  • danial Monday, 06 October 2014 08:02 PM

    எல்லாருமே...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .