2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

மூன்றுமுகம் தனுஷ்

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 07 , மு.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் திரைப்படம் அனேகன். இத்திரைப்படத்தில், தனுஷுக்கு ஜோடியாக அம்ரியா தஸ்தூர் என்ற புதுமுக நடிகை அறிமுகமாகிறார். மேலும், இதில் நவரச நாயகன் கார்த்திக் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருக்கிறார்.
 
தமிழ் சினிமாக்களில் காதல் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. அக்ஷன், திரில்லர், குடும்பப்பாங்கானது என எந்தவகைத் திரைப்படமாக இருந்தாலும் அதில் காதலும் இழைந்தோடியே இருக்கும். சில திரைப்படங்களில் காதல் மட்டுமே பிரதானமாக இருக்கும். ஆனால், காதல் இல்லாத திரைப்படங்களைத் தனித்துக் காண்பது அரிதிலும் அரிது.

அந்தவகையில், தனது அனேகன் திரைப்படமும் காதலை மையப்படுத்தியது தான் எனத் தெரிவித்துள்ளார் கே.வி.ஆனந்த். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,

அனேகன் திரைப்படம் காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. அனேகன் என்ற பெயர் ஒரு தனிமனிதனை குறிப்பிடுவது அல்ல. பல மனிதர்களை உள்ளடக்கியது. திருவாசகத்தில் இடம்பெற்றுள்ள ஒரு வாசகத்தை வைத்துத்தான் இத்திரைப்படத்தின் தலைப்பை தெரிவு செய்துள்ளோம்.

வௌ;வேறு கால கட்டங்களில் நடக்கும் கதை என்பதால் இப்படத்தில் தனுஷும், அம்ரியா தஸ்தூரும் மூன்றுவிதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் என இவ்வாறு தெரிவித்துள்ளார் கே.வி.ஆனந்த்.

இத்திரைப்படத்துக்கு, ஹரீஸ் ஜெயராஜ் இசையமைக்க, ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இது கே.வி.ஆனந்தின் 5ஆவது திரைப்படமாகும்.

இத்திரைப்படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடந்து வருகின்றன. பாடல்களை இம்மாதத்தில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். நவம்பரில் படம் வெளியாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .