2025 மே 19, திங்கட்கிழமை

'கோபக்காரி'

George   / 2014 ஒக்டோபர் 08 , மு.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


நான் பெரிய கோபக்காரி. எனக்கு கோபம் வராது என்று யார் சொன்னது. கடுமையாக கோபப்படுவேன். ஆனால், அதை வெளியே காட்ட மாட்டேன். என் மனதுக்கு உள்ளேயே திட்டி தீர்ப்பேன் என நடிகை சமந்தா கூறியுள்ளார்.

சமந்தா தற்போது, தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக நடிக்கிறார்.

தமிழில் விஜய் ஜோடியாக நடிக்கும் கத்தி படம் தீபாவளிக்கு வருகிறது. விக்ரம் ஜோடியாக நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார். தெலுங்கிலும் ஒரு படம் கைவசம் உள்ளது.

சமந்தாவுக்கு கோபமே வராது என்றும், எல்லோரிடமும் அன்பாக பழகக் கூடியவர் என்றும், பட உலகினர் பாராட்டுகின்றனர். தனக்கு கெடுதல் நினைப்பவர்களிடமும் கோபப்பட மாட்டார் என்று கூறுகின்றனர்.

இது குறித்து சமந்தா கூறும்போது,

நான் பெரிய கோபக்காரி. எனக்கு கோபம் வராது என்று யார் சொன்னது. கடுமையாக கோபப்படுவேன். ஆனால், அதை வெளியே காட்ட மாட்டேன். என் மனதுக்கு உள்ளேயே திட்டி தீர்ப்பேன்.

ஒரு இயக்குநர் படப்பிடிப்பில் எனக்கு ரொம்ப தொல்லை கொடுத்தார். ஒரே காட்சியில் திரும்ப திரும்ப நடிக்க சொல்லி கஷ்டப்படுத்தினார். அரை மணி நேரம் அந்த காட்சியை எடுத்தார். அப்போது, அவர் மேல் எனக்கு கோபம், கோபமாய் வந்தது.

மனதுக்குள் 'ராஸ்கல்', முட்டாள், பன்றி என்றெல்லாம் திட்டினேன். இப்படித்தான் என் கோபத்தை வெளிப்படுத்துவேன் என்கிறார் சமந்தா.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X