2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

கத்தியை காட்டி களவாடிய பொழுதுகள்

George   / 2014 ஒக்டோபர் 14 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


தங்கர்பச்சான் இயக்கத்தில் பிரபுதேவா, பூமிகா மற்றும் பிரகாஷ்ராஜ் நடிப்பில் தயாராகி உள்ள களவாடிய பொழுதுகள் திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளதாம்.

நீண்ட காலத்திற்குப் பின் பிரபுதேவா மற்றும் பூமிகா நடித்துள்ள இப்படத்தை மக்கள் அதிகம் எதிர்பார்த்த போதும், கடும் நிதி நெருக்கடி மற்றும் சரியான விலை கிடைக்கமாமை போன்ற காரணங்களால் படத்தை தயாரித்த ஐங்கரன் தயாரிப்பு நிறுவனம் களவாடிய பொழுதுகளை ரிலீஸ் செய்யாமல் காலம் தாழ்த்தி வந்தது.

எனினும் அந்தப்படத்தை விரைவில் வெளியிடுவது தொடர்பில் அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் லைகாவுடன் இணைந்து விஜயின் கத்தி படத்தை ஐங்கரன் தயாரித்துள்ளது. எதிர்ப்புகள் இருந்தபோதும், கத்தி நல்ல விலை போயுள்ளதாகத் தெரிகிறது.

எனவே கத்தி படத்தின் மூலம் கிடைக்கப்பெற்றுள்ள இலாபத்தில், களவாடிய பொழுதுகள் படத்தை ரிலீஸ் செய்ய தயாரிப்பு தரப்பு முடிவு செய்துள்ளதாக கோடாம்பாக்க வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.




  Comments - 0

  • சந்திரன் Thursday, 16 October 2014 04:47 AM

    தங்கர்ப்பச்சன் அவுஸ்திரேலியா வந்தபோது திரைப்படங்களை ஒரு கூட்டு நிறுவனமாக தயாரிக்க முயற்சிகள் எடுத்தார்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .