2025 மே 19, திங்கட்கிழமை

தினமும் முத்தம் கேட்கும் சங்கர்

George   / 2014 ஒக்டோபர் 20 , மு.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


இயக்குனர் ஷங்கர் ஐ பட வேலைகளில் மூழ்கி இருந்தாலும் மற்ற படங்களை பற்றியும் அவ்வப்போது தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்து வருகிறார்.

சமீபத்தில் சதுரங்க வேட்டை, வேலையில்லா பட்டதாரி, ஜிகர்தண்டா ஆகிய படங்கள் தொடர்பில் தனது பாரட்டு மழையை பொழிந்த சங்கரின் பார்வை தற்போது கத்தி படத்தின்மேல் விழுந்துள்ளது.

கத்தி படத்தில் இடம்பெற்றுள்ள பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா பாடலை தினமும் கேட்டுக்கொண்டிருப்பதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது, கத்தி படத்தின் பக்கம் வந்து பாடல் ராக்கிங், தினமும் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

அதபோல் மெட்ராஸ் படத்திலிருந்து நான்... நீ, சென்னை வடசென்னை பாடல்களையும் விரும்பிகேட்கிறேன் புதிதாகவும், தென்றல் போலவும் இருக்கிறது என்று அதில் குறிப்பிட்டிருக்கிறார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X