2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

சமந்தாவின் திட்டம்...

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 21 , மு.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


நிறைய படங்களில் நடிக்கணும். கோடி கோடியாய் சம்பாதிக்க வேண்டும் என்றுதான் நடிகைகளும், அவர்களின் அம்மாக்களும் திட்டமிடுவார்கள். ஆனால் நடிகை சமந்தாவோ, சீக்கிரம் திருமணம் செய்துகொண்டு குழந்தைகள், குடும்பம் என்று செட்டில் ஆகவேண்டும் என்று திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.

ஜீவா, சூர்யா, விக்ரம், விஜய், என முன்னனி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்துவிட்டார் நடிகை சமந்தா. விஜயுடனான கத்தி திரைப்படம் வெளியீட்டுக்காக காத்திருக்கிறார். இது தனக்கு முக்கியமான திரைப்படம் என்று கூறி வருகிறார் சமந்தா.

ஏற்கனவே சினிமாவை விட்டு விலக நினைக்கிறேன் எனக் கூறி ரசிகர்களை கலங்க வைத்த சமந்தா, அடுத்த அதிரடியாக தனது திருமணம் குறித்து பதில் கூறியுள்ளார். அண்மையில் ஒரு பேட்டி ஒன்றில் சமந்தா சீக்கிரமே திருமணம் செய்து கொண்டு, குழந்தையும் பெற்றுக்கொள்வேன் எனக் கூறி அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறார்.

இன்னும் ஒரு சில ஆண்டுகள் மட்டுமே நான் சினிமாவில் நடிப்பேன். அநேகமாக அடுத்த சில ஆண்டுகளுக்குள் திருமணம் செய்து கொள்வேன். அதன் பின் சீக்கிரமாகவே குழந்தையும் பெற்றுக் கொள்வேன். எனக்கு 60 வயது ஆகும் போது என்னுடைய குழந்தைக்கு 15 வயது ஆக இருப்பதை நான் விரும்பவில்லை.

அதிகபட்சமாக அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் குழந்தை பெற விரும்புகிறேன். அதனால் சீக்கிரமே சினிமாவில் நடிப்பதை விட்டுவிடுவேன்' என்று சொல்லியிருக்கிறார் சமந்தா.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .