2025 மே 19, திங்கட்கிழமை

இவன் வேற மாதிரி...

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 23 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


கும்கி, இவன் வேற மாதிரி, அரிமா நம்பி, சிகரம் தொடு ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகர் விக்ரம் பிரபு, அடுத்து விஜய் இயக்கத்தில் நடிக்கிறார்.

இதுபற்றி இயக்குநர் விஜய் கூறும்போது, 'விக்ரம் பிரபுவை வைத்து படம் இயக்குகிறேன் என்று எனது அம்மாவிடம் சொன்னபோது நடிகர் திலகத்தின் குடும்பத்தில் நீ படம் செய்வது பெரிய விஷயம் என்றார்.

இந்த திரைப்படத்தின் ஷூட்டிங், கேரளாவில் நடந்து வருகிறது. விக்ரம் பிரபுவிடம் காட்சிகளை விளக்கும்போது 'அதற்கு என்ன லொஜிக்,' என்று கேட்பார். அதற்கு காரணம் அவர் உதவி  இயக்குநராக பணியாற்றி நடிக்க வந்தவர் என்பதாகும். அவர் கேட்கும் லொஜிக்கை விவரித்த பிறகுதான் நடிப்பார்.

ஒரு இயக்குநராக ஏற்கனவே நான் லாஜிக் பார்த்து காட்சி அமைத்திருந்தாலும் அதை ஹீரோவும் கேட்கும்போது காட்சியில் அவர் காட்டும் ஈடுபாடு பொறுப்பை அதிகரிக்கிறது.

இதில் கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக அறிமுகமாகிறார். இவர், நெற்றிக்கண் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்த மேனகாவின் மகளாவார்' என்று விஜய் கூறினார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X