2025 மே 19, திங்கட்கிழமை

கொம்பனைப் பிடிக்கும் நயன்...

Menaka Mookandi   / 2014 நவம்பர் 05 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


கேரளத்து சேச்சியான டயானா மரியம் குரியனை அதாங்க நயன்தாராவை கோலிவூட்டுக்கு அழைத்து வந்தவர் ஹரி. சரத்குமார் ஜோடியாக ஐயா திரைப்படத்தில் நடிக்க வைக்க தான் நயன்தாராவை தமிழகத்துக்கு அழைத்து வந்தார் ஹரி.

முதல் படத்தில் சுப்ரீம் ஸ்டார், அடுத்த படமான சந்திரமுகியில் சூப்பர் ஸ்டார் என நயன்தாராவின் கெரியர் ஆரம்பத்திலேயே பிக்கப்பாகிவிட்டது.

நயன்தாரா காதல் வலைகளில் விழுந்தது, நடிப்புக்கு முழுக்கு போட்டது, மீண்டும் நடிக்க வந்தது பற்றி தெரிந்த விடயமே. இரண்டாம் இன்னிங்ஸில் நயனின் கெரியர் படு சூப்பர் என்றே கூற வேண்டும்.

இந்த கோலிவூட் இளம் ஹீரோக்கள் எல்லாரும், நயனுடன் ஜோடி போட அடிபோடுவதால் அவரின் மார்க்கெட் உச்சத்தில் உள்ளது.

ஈ திரைப்படத்தை அடுத்து நயன்தாரா மீண்டும் ஜீவாவுடன் ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளார். விஜய்யை இயக்கும் அட்லீ, இந்த திரைப்படத்திலும் தளபதிக்கு ஜோடியாக நயன்தாராவையே தெரிவு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.

ஹரி, கார்த்தியை வைத்து எடுக்கும் திரைப்படம் கொம்பன். அதில் அவருக்கு யாரை ஜோடியாக்கலாம் என்று ரூம் போட்டு யோசித்ததில், நயன்தாராவை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளனராம் படக்குழுவினரிடம். ஹரியின் இயக்கத்தில் மீண்டும் நடிக்க நயன்தாராவும் ஒப்புக்கொண்டுள்ளாராம்.

நயன்தாரா தற்போது கார்த்தியின் அண்ணன் சூர்யாவுடன் சேர்ந்து மாஸ் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X