2025 மே 19, திங்கட்கிழமை

த்ரிஷா மீது கடுப்பாகியுள்ள அனுஷ்கா

Menaka Mookandi   / 2014 நவம்பர் 10 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கி வரும் என்னை அறிந்தால் திரைப்படத்தின் கதாநாயகி அனுஷ்கா, அத்திரைப்படத்தில் மற்றொரு கதாநாயகியாக நடித்துவரும் த்ரிஷா மீது கடும் கோபத்தில் உள்ளாராம்.

இத்திரைப்படத்தில் அனுஷ்கா மட்டுமே கதாநாயகி என்று ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. கௌரவத் தோற்றத்தில் நடிக்கவே த்ரிஷாவை அனுகியிருந்தனர்.

இந்நிலையில், இத்திரைப்படத்தில் த்ரிஷா நடிப்பாரா இல்லையா என்றிருந்த நிலையில், ஒரு வழியாக நடிக்க வந்தார். ஆனால், கௌரவத் தோற்றத்தில் நடிக்க வந்த இடத்தில் இயக்குநரிடம் என் கதாபாத்திரத்தை பெரிதுபடுத்துங்கள். எனக்கு இன்னும் கொஞ்சம் காட்சி கொடுங்கள் என்று த்ரிஷா வற்புறுத்தி வந்துள்ளார்.

அவரது வற்புறுத்தலை அடுத்தே இயக்குநர், த்ரிஷாவின் கதாபாத்திரத்தை மற்றொரு ஹீரோயினாக்கிவிட்டாராம். இப்படி தலையை காட்டிவிட்டு செல்லும் காட்சியில் நடிக்க வந்து ஹீரோயினான த்ரிஷா மீது அனுஷ்கா நடிகை கோபத்தில் உள்ளாராம்.

மார்க்கெட் இல்லாத காரணத்தால் த்ரிஷா, தற்போது இளம் ஹீரோக்களை குறிவைத்து அவர்களின் திரைப்படங்களில் நடிக்க முயற்சி செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X