2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

ரஜினிக்கு சிறப்பு விருது

George   / 2014 நவம்பர் 12 , மு.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


இந்திய சினிமா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ரஜினிகாந்துக்கு சிறப்பு விருது வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

கோவாவில் எதிர்வரும் 20ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 45ஆவது சர்வதேச திரைப்பட விழாவின் போது அவருக்கு இந்த விருது வழங்கப்படவுள்ளது.

11 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், 75 நாடுகள் பங்கேற்பதுடன் ஆசிய நாடுகளின் 7 படங்களும ஏனைய நாடுகளின் 61 படங்களும் திரையிடப்படவுள்ளன.

இந்த திரைப்பட விழாவின் ஆரம்ப விழாவில் இந்திய சூப்பர் ஸ்டார் நடிகர்களான அமிதாப்பச்சன், ரஜினிகாந்த் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்.

இத்தகவலை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இராஜாங்க அமைச்சர் ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்துக்கு இந்த ஆண்டின் சிறந்த திரையுலக பிரபலம் என்ற விருது வழங்கப்படுகிறது. இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவையொட்டி, இந்த விருதை அவருக்கு மத்திய அரசு வழங்குகிறது என்றார்.

இதேவேளை, மத்திய அரசின் சிறப்பு விருது பெறும் நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து தெரிவித்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .