2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

ரஜினியால் தடம் மாறிய சோனாக்சி

George   / 2014 நவம்பர் 15 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


ரஜினி அறிவுரையால் என் வாழ்க்கை மாறியது என சோனாக்சி சின்ஹா மனந்திறந்துள்ளார்.

ரஜினியுடன் லிங்கா படத்தில் நாயகியாக நடித்துவரும் சோனாக்சி சின்ஹா, ரஜினியுடன் நடித்த அனுபவங்கள் பற்றி கூறும் போது, இதனை தெரிவித்தார்.

ஹிந்தியில் சல்மான்கான், அஜய்தேவ்கான், சாகித்கபூர் என முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து விட்டேன். ஆனாலும் எனக்கு ரோல் மாடலாக இருப்பது ரஜினிதான்.

அவருடன் லிங்கா படத்தில் நடித்ததை என்னால் மறக்கவே முடியாது. மற்றைய கதாநாயகர்களுடன் நடித்த போதெல்லாம் கிடைக்காத அனுபவம் லிங்காவில் ரஜினியுடன் நடித்தபோது கிடைத்தது.

ரஜினி நிறைய விடயங்கள் சொல்லி கொடுத்தார். உடலை கோவில் மாதிரி வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அறிவுரை சொன்னார். அவர் ஒரு பல்கலைக்கழகம் மாதிரி தெரிந்தார். எளிமையாகவும் அன்பாகவும் பழகினார். அவரிடம் இன்னும் கற்றுக் கொள்ள வேண்டிய விடயங்கள் நிறைய இருக்கிறது.

படப்பிடிப்பில் கேமரா முன்னால் இருக்கும் ரஜினி, கேமரா பின்னால் இருக்கும் ரஜினி என இரு வேறு ரஜினியை பார்த்தேன். எனக்கு கேமரா பின்னால் இருந்த ரஜினியைதான் ரொம்ப பிடித்தது.

இவ்வாறு சோனாக்சி சின்ஹா தனது மனதில் உள்ளதை கூறினார்.








  Comments - 0

  • jeeva Monday, 17 November 2014 08:54 PM

    உண்மையான அன்பு வழி காட்டுதல் இருந்தால் தடம் மாரி போக வாப்புகள்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .