2025 மே 19, திங்கட்கிழமை

ஆர்யாவின் தல மரியாதை...

Menaka Mookandi   / 2014 நவம்பர் 21 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


நடிகர் அஜீத்தை வைத்து பில்லா, ஆரம்பம் ஆகிய திரைப்படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன், ஆர்யாவை வைத்து யட்சன் என்ற திரைப்படத்தை இயக்குகின்றார். பிரபல வார இதழில் எழுத்தாளர் சுபா எழுதிய தொடர்கதையை, சின்னச்சின்ன மாற்றங்கள் செய்து யட்சன் திரைப்படத்தின் கதையை உருவாக்கியுள்ளனர்.

யூ.டி.வி மோஷன் பிக்சர்ஸ் தயாரிக்கும் யட்சன் திரைப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தில், அஜித் ரசிகர் மன்றத் தலைவராக ஆர்யா நடிக்கிறார் என்பது அறிந்ததே. ஏற்கெனவே இந்த திரைப்படத்தில் கௌரவ தோற்றத்தில் அஜீத் நடிக்க இருக்கிறார் என்ற செய்தி சில மாதங்களுக்கு முன் வெளியானது. ஆனால், அந்த செய்தி வதந்தி என்று தற்போது தெரியவந்துள்ளது.

அதேசமயம் அஜித் நடிக்காவிட்டாலும், அவரது ரசிகர்மன்ற தலைவராக ஆர்யா நடிப்பது உண்மை என்ற செய்தி உறுதியாகியுள்ளது. அஜித் நடித்த வீரம் திரைப்படத்துக்காக வைக்கப்பட்ட மிகப்பெரிய கட்அவுட் மேல் ஏறிய ஆர்யா பாலாபிஷேகம் செய்வது போன்ற காட்சி அண்மையில் படமாக்கப்பட்டது.

இந்த திரைப்படத்தில் அஜீத்தின் தீவிர ரசிகர்கூட்டங்கள் என ஒரு படையே நடிக்கின்றனராம். இதை அப்படியே படத்தின் ப்ரமோஷன் காட்சிகளில் இணைத்து, அஜித் ரசிகர்களை தியேட்டருக்கு திரட்டிக்கொண்டுவர விஷ்ணுவர்தனும், ஆர்யாவும் மெகா ப்ளான் போட்டுள்ளனர் என தகவல்கள் வந்துள்ளன.

இந்த திரைப்படத்தில் ஆர்யாவின் பெயர் சின்னா. இந்த பாலபிஷேகம் நடத்திமுடித்தவுடன், அவர்களுக்கு ஆச்சரியம் அளிக்கும் வகையில் சமூகவலைதளங்களில் ஆர்யாவை சின்ன தல சூவாயடய_உகின்யெ ஹாஸ்டேக்யை ட்ரெண்டிங் செய்து வருகின்றனர் அஜீத் ரசிகர்கள்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X