2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

குள்ளனாகிறார் விஜய்

Menaka Mookandi   / 2014 நவம்பர் 28 , மு.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஒரேவித தோற்றத்தில் நடித்து வரும் விஜய், முதல்முறையாக ஒரு மாற்றத்துக்காக குள்ளனாக நடிக்க உள்ளார். சிம்புதேவன் இயக்கும் சரித்திர கால திரைப்படத்தில் விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப் உட்பட பலர் நடிக்கிறார்கள். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது.

இந்த திரைப்படத்துக்காக பிரமாண்ட மன்னர் மாளிகை செட் போடப்பட்டுள்ளது. இந்த படத்தில் இரட்டை வேடத்தில் விஜய் நடிக்கிறார். அதில் ஒரு விஜய் குள்ளன் என்பது தெரியவந்துள்ளது.

மன்னர் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். இதில் ஸ்ரீதேவி ராணி வேடம் ஏற்கிறார். அவரது மகளான ஹன்சிகாவின் காதலராக குள்ளன் விஜய் நடிக்க உள்ளார். கதைப்படி குள்ளன் விஜய் ஏழையாம். ஸ்ரீதேவியின் தளபதியாக சுதீப் நடிக்கிறார்.

அபூர்வ சகோதரர்கள் படத்தில் கமல்ஹாசன் குள்ளனாக நடித்திருந்தார். அதற்கு பிறகு முழு படத்திலும் எந்த ஹீரோவும் இதுபோல் நடிக்கவில்லை. இப்போது விஜய் அதுபோல் நடிப்பதாக தகவல் கசிந்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .