2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

ஆசியாவின் செக்ஸியான பெண் பிரியங்கா

Menaka Mookandi   / 2014 டிசெம்பர் 05 , மு.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஆசியாவின் கவர்ச்சிகரமான 50 பெண்கள் பட்டியலில் பொலிவூட் நடிகை பிரியங்கா சோப்ரா முதலிடத்தை பிடித்துள்ளார். இங்கிலாந்தைச் சேர்ந்த ஈஸ்டர்ன் ஐ என்ற நாளிதழ் ஆசியாவின் கவர்ச்சிகரமான பெண்கள் யார் என்று ஆண்டுதோறும் கணக்கெடுப்பு நடத்தி பட்டியலை வெளியிடும்.

அதன்படி, இந்த ஆண்டுக்கான பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. 50 பெயர் அடங்கிய அந்த பட்டியலில் இடம்பிடித்துள்ள சிலரை பார்ப்போம்,

ஆசியாவின் கவரச்சிகரமான பெண்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது பொலிவூட் நடிகையும், பாடகியுமான பிரியங்கா சோப்ரா. முன்னதாக கடந்த 2012ஆம் ஆண்டிலும் பிரியங்கா தான் ஆசியாவின் கவர்ச்சிகரமான பெண்ணாக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு பட்டியலில் முதலிடத்தில் இருந்த பொலிவூட் நடிகை கத்ரீனா கைஃப், இந்த ஆண்டு 4ஆவது இடத்தில் உள்ளார். பிரபல டிவி நடிகை த்ரஸ்தி தாமி இரண்டாவது இடத்திலும், மற்றொரு டிவி நடிகையான சனாயா இரானி 3ஆவது இடத்திலும் உள்ளனர். டிவி ரியாலிட்டி நடிகை கவ்ஹர் கான் 5வது இடத்தில் உள்ளார்.

ஆசியாவின் கவர்ச்சிகரமான 50 பெண்கள் பட்டியலில் தீபிகா படுகோனே (6), கரீனா கபூர் (8), சோனம் கபூர் (9), ஷ்ரத்தா கபூர் (17), ஆலியா பட் (24), மஹிரா கான் (34), கங்கனா ரனௌத் (38), அனுஷ்கா சர்மா (47), கனிகா கபூர் (50) ஆகிய இந்திய நடிகைகளும் உள்ளனர்.

ஆசியாவின் கவர்ச்சிகரமான பெண்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ள அதிக வயதுள்ள நடிகை மாதுரி தீக்சித். 47 வயதாகும் அவருக்கு பட்டியலில் 28ஆவது இடம் கிடைத்துள்ளது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .