2025 மே 19, திங்கட்கிழமை

சாதனை படைத்த டீசர்

George   / 2014 டிசெம்பர் 07 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


அஜீத்தின் ''என்னை அறிந்தால்'' திரைப்படத்தின் டீசர் புதிய சாதனை படைத்துள்ளது. கடந்த வியாழக்கிழமை  வெளியிடப்பட்ட  டீசர், வெளியான 48 மணி நேரத்துக்குள் 20 இலட்சத்துக்கும் அதிகமானவர்களால் பார்வையிடப்பட்டுள்ளது.

இந்த டீசரில் அஜீத் இரு கெட்டப்பில் தோன்றுகிறார். ஒரு கெட்டப்பில் வாட்டசாட்டமான இளைஞனாக சிரித்த முகத்துடன் வருகிறார். இன்னொரு கெட்டப்பில் நடுத்தர வயதில் தாடியுடனும், கையில் துப்பாக்கியுடனும் ஆவேச முகம் காட்டுகிறார்.

துப்பாக்கியால் யாரையோ குறி வைக்கவும் செய்கிறார். கதையை புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு டீசர் உள்ளது என்று ரசிகர்கள் தெரிவித்தனர். அஜீத் கெட்டப் பிரமாதமாக உள்ளது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

டீசரை சுமார் 25 லட்சத்து 84 ஆயிரம் பேர் பார்த்து ரசித்துள்ளதுடன் 62 ஆயிரத்துக்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர்.

அத்துடன், அண்மையில் ஹிரித்திக் ரோஷன் நடிப்பில் வெளிவந்த பேங் பேங் திரைப்படத்தின் டீசர் ,லைக்ஸையும் என்னை அறிந்தால் முறியடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X