2025 மே 19, திங்கட்கிழமை

லிங்கா பார்ப்போமா...?

Menaka Mookandi   / 2014 டிசெம்பர் 11 , பி.ப. 02:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


நடிகர் ரஜினிகாந்த் 4 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு நடித்துள்ள நேரடி திரைப்படமான லிங்கா, நாளை உலகெங்கும் பிரமாண்டமாக வெளியாகிறது. படத்தின் முதல் இன்று இரவே வெளியிடப்படுகிறது. ரொக்லைன் வெங்கடேஷ் தயாரிப்பில், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி இரு வேடங்களில் நடிக்க, அவருக்கு ஜோடியாக சோனாக்ஷி சின்ஹா மற்றும் அனுஷ்கா நடித்துள்ள பிரமாண்ட படம் லிங்கா.

உலகெங்கும் 5000 அரங்குகளில் இந்த திரைப்படத்தை வெளியிடுகிறார்கள். வேறு எந்த இந்திய திரைப்படமும் இத்தனை அரங்குகளில் வெளியானதில்லை. குறிப்பாக வளைகுடா நாடுகளில் 80 அரங்குகளில் இந்த திரைப்படம் வெளியாகிறது. அமெரிக்காவில் மட்டும் 328 அரங்குகளிலும், ஆந்திராவில் 1,400 அரங்குகளிலும், கேரளாவில் 250 அரங்குகளிலும், கர்நாடகத்தில் 180 அரங்குகளிலும் லிங்கா வெளியாகிறது.

தமிழகத்தில் லிங்கா வெளியாகும். அத்தனை அரங்குகளும் திருவிழா கோலம் பூண்டுள்ளன. கொடிகள், தோரணங்கள், பிரமாண்ட ரஜினி கட்அவுட்டுகள், பேனர்கள் என அமர்க்களப்படுத்தியுள்ளனர் ரஜினி ரசிகர்கள்.

வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் இதே போன்ற ஏற்பாடுகளை ரசிகர்கள் செய்துள்ளனர். லிங்கா வெளியாகும் அரங்குகளில் பார்வையாளர்களுக்கு இனிப்பு வழங்குவது, விசிலடித்து ஆரவாரம் செய்ய இலவச விசில்கள் வழங்குவது என ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

இதுவரை எந்த ரஜினி திரைப்படமும் இப்படி வெளியானதில்லை எனும் அளவுக்கு லிங்கா வெளியீடு அமைந்துள்ளது. ரசிகர்கள் எப்போதுமில்லாத பெரும் உற்சாகத்துடன் இந்த வெளியீட்டை ஒரு திருவிழாவாகக் கொண்டாட ஆரம்பித்துள்ளனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X