2025 மே 19, திங்கட்கிழமை

ஐ ட்ரைலர்...!

Menaka Mookandi   / 2014 டிசெம்பர் 19 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள ஐ திரைப்படத்தின் ட்ரைலர், நேற்று இரவு வெளியிடப்பட்டது. விக்ரம் - எமி ஜாக்சன் நடிப்பில் ஐ திரைப்படம், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தயாரிக்கப்பட்டு வருகிறது. பல முறை இந்த திரைப்படத்தின் ரிலீஸ் திகதி தள்ளிப்போடப்பட்டது. 180 கோடி இந்திய ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள ஐ, வரும் பொங்கலுக்கு உலகம் முழுவதும் வெளியாகிறது.

திரைப்படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் ஹொலிவுட் நடிகர் அர்னல்ட் முன்னிலையில் வெளியானது. இணையத்தில் 9 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்று சாதனைப் படைத்தது. இப்போது திரைப்படத்தின் 2 நிமிட ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது. நேற்று இரவு 10 மணிக்கு யுட்யூபில் இதனை வெளியிட்டது ஆஸ்கார் மூவீஸ் நிறுவனம்.

வெளியான 9 மணி நேரத்தில் இந்த ட்ரைலருக்கு 5 லட்சம் பேருக்கும் அதிகமான பார்வையாளர்கள் கிடைத்துள்ளனர். இந்த ட்ரைலர் உலகெங்கும் ஹொலிவுட் திரைப்படமான தி ஹாப்பிட்டுடன் இணைத்து திரையிடப்பட உள்ளது. ஐ திரைப்படம் உலகம் முழுவதும் பல ஆயிரம் அரங்குகளில் வெளியாகவிருக்கிறது. வசூலில் பல சாதனைகள் படைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X