2025 மே 19, திங்கட்கிழமை

நித்யாவின் ரொமான்ஸ்

Gavitha   / 2014 டிசெம்பர் 20 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஆர்யாவுடன் ரொமான்ஸ் செய்யும் நித்யா மேனன்' தலைப்பை பார்த்து ஏதேதோ நினைச்சிட்டிங்களா?

அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க! நடிகர் ஆர்யாவும் நடிகை நித்தயா மேனனும் திரைப்படமொன்றில் ஜோடி சேரவுள்ளனராம்.

துல்கர் சல்மான்இ பஹத் பாசில்இ நிவின் பாலிஇ நஸ்ரியா நஸீம் என நட்சத்திரக் கூட்டங்கள் நடித்து மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடிய திரைப்படம் 'பெங்களூர் டேஸ்'.

இப்படத்தை அஞ்சலி மேனன் என்ற இளவயது பெண் இயக்கியிருந்தார்.

இந்த வருடம் வெளியாகிய இந்த திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இன்றைய இளைய சமூகத்திற்கேற்றாற்போல், அவர்களுடைய நிஜ வாழ்க்கையில் நடக்கின்ற சம்பவங்களை திரையில் புதிய அனுபவத்தை பெங்களூர் டேஸ் கொடுத்திருக்கிறது.

தற்போது இந்த திரைப்படம் தமிழில் ரீமேக் ஆகவுள்ளது. பி.வி.பி. சினிமா நிறுவனமும்இ பிரபல தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர்இ விநியோகஸ்தரான தில் ராஜுவும் இந்த திரைப்படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி தமிழ்இ தெலுங்கில் தயாரிக்கவுள்ளார்கள்.

தமிழில் வெளிவந்த சந்தோஷ் சுப்ரமணியம் திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பை இயக்கிய பாஸ்கர் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் இயக்கவுள்ளார்.

இதில் சித்தார்த்இ சமந்தா நடிக்கவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இவர்களுடன் ஆர்யாவும் இவருக்கு ஜோடியாக நித்யா மேனனும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X