2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

அனுவின் அழகு ரகசியம்

Kanagaraj   / 2014 டிசெம்பர் 21 , மு.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனுஷ்காவுக்கு 33 வயது ஆகிறது.  எனினும் இளம் கதாநாயகர்களுடன் ஜோடியாக நடிக்கிறார். அவ்வளவுக்கு கொள்ளை அழகாகவும் உள்ளார். அனுஷ்காவின் வசீகர அழகுக்கு அவர் சாப்பிடும் உணவு வகைகள் என்னென்ன என்ற ரகசியம் தற்போது வெளிவந்துள்ளது.

 

அவர் தினமும் காலையில் எழுந்ததும் யோகா செய்கிறார். தியான பயிற்சியிலும் ஈடுபடுகிறார். அதன் பிறகு ஒரு கோப்பை பச்சை தேயிலை அருந்துகிறார்.

 

தொடர்ந்து முளை கட்டிய தானியங்களை சாப்பிடுகிறார். அதன் பிறகு காலை சிற்றுண்டியாக இட்லி, தோசை குறைவான அளவு சாப்பிடுகிறார்.

 

மதிய உணவுக்கு முன் பழச்சாறு அருந்துகிறார். மதிய உணவாக காய்கறி சாலட் சாப்பிடுகிறார். சிறிது நேரம் கழித்து உலர்ந்த பழங்களை சாப்பிடுகிறார். 

 

அதன் பிறகு இரவு உணவாக கரட், பீட்ரூட், வெள்ளரிக்காயுடன் ரொட்டி சாப்பிடுகிறார். உணவு வகைகளை சீராக எடுத்துக் கொள்வதால் எப்போதும் சுறுசுறுப்பாகவும் அழகாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறார் அனுஷ்கா.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .