2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

சன்னியின் புத்தாண்டு குத்தாட்டம்

Kanagaraj   / 2014 டிசெம்பர் 22 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஸ்டார் ஹோட்டல்களில் நடனம் ஆட ஹீரோயின்கள் தயாராகி வருகின்றனர். அவர்களுக்கு கோடிகளில் சம்பளம் பேசப்படுகிறது. பெரும்பாலும் பொலிவூட் ஹீரோயின்களுக்கு இதற்கான வாய்ப்பு அதிகமாகவே கிடைக்கின்றது.

சில தென்னிந்திய ஹீரோயின்களுக்கும் அழைப்பு வந்திருக்கிறது. பிரதமர் மோடியை விட அதிகமாக கூகுளில் தேடப்பட்டவர் எனும் பெருமையை பெற்ற கவர்ச்சி நடிகை சன்னி லியோனும் புத்தாண்டு தின இரவு நடனமாடுகிறார். 
 
இவர் ஹைதராபாத் நகரில் உள்ள ஒரு ஸ்டார் ஹோட்டலில் 31ஆம் திகதி இரவு புத்தாண்டு நடனம் ஆட ஒப்புக்கொண்டுள்ளதாகவும் இதற்காக இவருக்கு 5 கோடி  இந்திய ரூபாய் சம்பளம் தர ஹோட்டல் நிர்வாகம் முன்வந்துள்ளதாகவும் செய்தி வெளியாகிள்ளது.
 
இதனையடுத்து தான் கேட்ட சம்பளத்தை கொடுப்பதற்கு  ஒப்புக்கொண்டுள்ள ஸ்டார் ஹோட்டலில் நடனமாட சன்னி முடிவு செய்துள்ளாராம்.
 
வடகறி திரைப்படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு ஆடியதன் மூலம் தென்னிந்திய திரையுலகில் காலடி எடுத்து வைத்த சன்னிலியோன், கரண்ட் தேஜா என்ற தெலுங்கு திரைப்படத்திலும் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடினார். இதில் ஒரு பாடலுக்கே பலகோடி சம்பளம் வாங்கியவர் இந்த சன்னிலியோன்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .