Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Kanagaraj / 2014 டிசெம்பர் 22 , மு.ப. 09:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
லிங்கா திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தென்னிந்திய சினிமாவில் கால்பதித்துள்ள சோனாக்ஷி சின்ஹாவுக்கு பாராட்டுகளும் வாய்ப்புகளும் குவிகின்றன.
புதிய தமிழ்ப் திரைப்படங்களில் நடிக்க அவருக்கு பெரிய இயக்குநர்களிடமிருந்து அழைப்புகள் வந்தாலும், நல்ல கதைக்காக அவர் காத்திருப்பதாகக் கூறியுள்ளார்.
லிங்காவில் ராஜா லிங்கேஸ்வரன் பாத்திரத்தில் வரும் ரஜினியின் ஜோடி சோனாக்ஷி. ஹிந்திப் திரைப்படங்களில் தாராள கவர்ச்சியுடன் நடிக்கும் சோனாக்ஷிக்கு இந்தப் திரைப்படத்தில் பழங்கால தமிழ்ப் பெண்களைப் போல, ரவிக்கையில்லாமல் புடவை கட்டி நடிக்க வேண்டிய வேடம். அவரும் சிறப்பாக நடித்திருந்தார்.
அனுஷ்காவை விட சோனாக்ஷிக்கு ரசிகர்களிடமிருந்து ஏகப்பட்ட பாராட்டுகள் கிடைத்தன. இப்போது அடுத்தடுத்து பெரிய இயக்குநர்களின் திரைப்படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்புகள் வந்துள்ளன. தனது அடுத்த திரைப்படமும் லிங்கா மாதிரி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்பதால், கதைகளைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்தி வருகிறார் சோனாக்ஷி.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 May 2025
18 May 2025
18 May 2025